காரைக்குடியில் வெறும் 2 மணி நேரத்தில் 154 மில்லி மீட்டர் மழை.. சாக்கடையால் வந்த பெரிய சிக்கல்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் முழுவதும் நேற்று மாலை மிக கனமழை பெய்தது. அதிபட்சமாக காரைக்குடியில் 154 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இந்த கனமழையால் காரைக்குடியில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்த காரணத்தால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். அப்படி வீட்டிற்குள் சிக்கி தவித்தவர்களை அப்பகுதியினர் பத்திரமாக மீட்டனர்.
வடகிழக்கு பருவ மழை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. ஆனால் அதற்கு முன்பாக தமிழகத்தில் பரவலாக மழை தொடங்கிவிட்டது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் நேற்று மாலை மிக கனமழை பெய்தது. மிக குறைந்த நேரத்திலேயே காரைக்குடி பகுதியில் 154 மில்லி மீட்டர் மழை பெய்தது. வெறும் இரண்டு மணி நேரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் மழை நீரில் மூழ்கின.

காரைக்குடியில் பெய்யும் மழை நீர் கொப்புடை அம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கு போகும். அங்கிருந்து மடை வழியாக காரைக்குடி நாட்டார் கண்மாய்க்கு செல்லும். ஆனால் செக்காலை ரோட்டில் இருந்து ஐந்து விளக்கு, கண்ணன் பஜார், டெலிபோன் எக்ச்சேஞ்ச், கல்லுகட்டி வரை ஆக்கிரமிப்புகளாலும், கால்வாய்கள் நீண்ட காலம் தூர்வாரப்படாதாலும் கண்ணன் பஜார் பகுதியில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் வியாபரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தீபாவளி நெருங்கி வரும் நிலையில், ஏராளமான துணிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து வைத்திருந்தனர். அவை, மழைநீரில் நனைந்து போனதால் வியாபாரிகள் கவலை அடைந்தனர். இதனிடையே காரைக்குடி மாநகராட்சி நிர்வாகம், சாக்கடை கால்வாய்களை முறையாக தூர்வாராமல் விட்டதாலேயே, மழைநீர் முறையாகச் செல்ல முடியாமல் கால்வாய்கள் நிரம்பி வழிந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். சாக்கடைகள் அடைந்து சாக்கடை நீரும், மழை நீரும் சாலைகளில் பாய்ந்தோடிய நிலையில், அதில் தான் மக்கள் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. கால்வாயை தூர்வார காரைக்குடி மாநகராட்சி நிர்வாகம் முற்றிலும் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
இதனிடையே சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழை நிலவரத்தை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதன்படி காரைக்குடியில் 154 மில்லி மீட்டர் மழையும், சிவகங்கையில் 52 மில்லி மீட்டர் மழையும், திருப்பத்துரில் 32 மில்லி மீட்டர் மழையும், தேவகோட்டையில் 26 மில்லி மீட்டர் மழையும், திருமயத்தில் 22 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. இளையங்குடியில் 20 மில்லி மீட்டர் மழையும், மானாமதுரையில் 10 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மொத்தமாக பார்த்தால் மாவட்டம் முழுவதம் 350 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக பார்த்தால், 38.6 மில்லி மீட்டர் மழையும் நேற்று பெய்துள்ளது.
-
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
சிவகங்கையில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுப்பு! வியந்து பார்த்த மக்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications