“லாஸ்ட் ரவுண்டு” மழை.. தமிழ்நாட்டில் இந்த மாதம் சம்பவம் இருக்கு! எந்தெந்த நாட்களில் கொட்டும்
சென்னை: வட கிழக்கு பருவ மழையின் இறுதிச் சுற்று எப்போது தொடங்கும், என்ற விபரத்தை வெளியிட்டு இருக்கிறார் தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "தென் கிழக்கு அரபிக் கடலில் நிலவிய தாழ்வு பகுதி காற்று சுழற்சியாக மாறி தென் கிழக்கு அரபிக் கடல் & அதனை ஒட்டிய லட்சத் தீவு பகுதியில் நீடிக்கிறது. மற்றொரு காற்று சுழற்சி இலங்கைக்கு தெற்கே நீடிக்கிறது. வானிலை எதிர்ப்பார்ப்பு: தமிழகத்தில் ஜனவரி 3 ஆம் தேதி, ஜனவரி 4 ஆம் தேதி, ஜனவரி 5 ஆம் தேதி ஆகிய இன்று முதல் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையும், இரவில் குளிர்ந்த சூழலும், முற்பகல் வரை மேகமூட்டமும், பிற்பகலில் வெயிலும் இருக்கும். மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மட்டும் மிதமான மழை பதிவாகலாம்.

வளிமண்டலத்தின் மத்திய அடுக்கில் மேற்கு காற்று & கீழ் திசை காற்று சந்திப்பின் காரணமாக தமிழகத்தில் ஜனவரி 6 ஆம் தேதி, ஜனவரி 7 ஆம் தேதி, ஜனவரி 8 ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் இறுதி சுற்று வட கிழக்கு பருவமழையை எதிர்ப்பார்க்கலாம். குறிப்பாக ஜனவரி 3 ஆம் தேதி, ஜனவரி 6 ஆம் தேதி, ஜனவரி 7 ஆம் தேதி ஆகிய தேதிகளில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க மழை வாய்ப்பு உள்ளது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையமும், "ஜனவரி 2 ஆம் தேதி தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஜனவரி 3 ஆம் தேதி அதே பகுதிகளில் நிலவுவதாகவும் ஜனவரி 2 ஆம் தேதி தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஜனவரி 3 ஆம் தேதியும் அதே பகுதிகளில் நிலவுகிறது என்றும் தெரிவித்தது.
"ஜனவரி 6 ஆம் தேதி தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஜனவரி 8 மற்றும் ஜனவரி 9 ஆகிய தேதி தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்." என்றும் வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications