இன்னும் முடியல.. மழை இருக்கு.. சென்னையில் இன்று இடி, மின்னலுடன் வெளுக்கும்.. வானிலை மையம் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 13 ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசான மழைக்கும், இன்று தமிழகம், புதுவை, காரைக்காலில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 9 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10-12-2025 முதல் 13-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

light-to-moderate-rain-expected-in-tamil-nadu-puducherry-and-karaikal-meteorological-department

சென்னையில் இன்று எப்படி?

சென்னையில் இன்று (07-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை (08-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மழை அளவு செமீ:

* மிமிசல் (புதுக்கோட்டை) 4,
* திருவாடானை (ராமநாதபுரம்), ஊத்து (திருநெல்வேலி), ஆயிங்குடி (புதுக்கோட்டை). காக்காச்சி (திருநெல்வேலி), நாலுமுக்கு (இருநெல்வேலி) தலா 3.
* சிங்கம்புணரி (சிவகங்கை). தலைஞாயிறு (நாகப்பட்டினம்). தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்). மாஞ்சோலை (திருநெல்வேலி), திருப்பூண்டி (நாகப்பட்டினம்). மயிலாடுதுறை AWS (மயிலாடுதுறை), திருவாரூர் (திருவாரூர்), தொண்டி (ராமநாதபுரம்) தலா 2,

* சாத்தியார் (மதுரை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), கோடியக்கரை (நாகப்பட்டினம்), வட்டானம் (ராமநாதபுரம்). ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்). மயிலாடுதுறை (மயிலாடுதுறை, பேராவூரணி (தஞ்சாவூர்), திருவாரூர் AWS (திருவாரூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), நாகப்பட்டினம் AWS (நாகப்பட்டினம்), வேதாரண்யம் AWS (நாகப்பட்டினம்) தலா 1 செமீ மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

* 07-12-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 08-12-2025: எச்சரிக்கை ஏதுமில்லை.

* 09-12-2025: வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 10-12-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

* 11-12-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

* 07-12-2025: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு- மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

* 08-12-2025: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+