ரெடியா இருங்க..அடுத்த 3 மணி நேரம் ரொம்ப முக்கியம்! இடி மின்னலுடன் 16 மாவட்டங்களில் மழை! மெட் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 10 மணிக்குள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பகல் நேரங்களில் அதிக வெப்பத்தை உணர்ந்ததால் மக்கள் வெளியே வரவே தயங்கும் நிலை ஏற்பட்டது.

weather tamil nadu rain imd chennai

குறிப்பாக முதியவர்கள், குழந்தைகளுக்கு பல்வேறு விதமான வெயில் கால நோய்கள் ஏற்பட்டன. இந்த நிலையில் கோடை மழைக்குப் பிறகு தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டது.

இதேபோல தேனி, மதுரை, நெல்லை, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில், 16 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 10 மணிக்குள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று (25.07.2024) இரவு 10 மணிக்குள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏற்கனவே மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+