நனையப்போகும் தமிழகம்.. இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு ரெடியா இருங்க! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்றும் இடி, மின்னலுடன் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிவிப்பில், "தமிழகத்தில் ஏப்.11ம் தேதி நிலவரப்படி, தென் தமிழக கடலோரப்பகுதிகளில் ஒருசில இடங்களிலும், ஏனைய தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக குன்னூரில் PTO 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Like yesterday there will be thunder and lightning rain in Tamil Nadu today

அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில், தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 2° - 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது.

அதிக பட்ச வெப்பநிலை திருப்பத்தூரில் 41.6° செல்சியஸ் மற்றும் ஈரோட்டில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37° - 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகளில் 33° - 37° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 21° - 31° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 36.0° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.9° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த 7 நாட்களை பொறுத்த அளில், தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதேபோல குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்.14 மற்றும் 15ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்.16 முதல் 18ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பை பொறுத்த அளவில், இன்று தொடங்கி 16ம் தேதி வரை அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்.

இன்றும் நாளையும், அடுத்த இரண்டு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37°-40° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 33°-37° செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஏப்.14 முதல் 16ம் தேதி வரை, அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் 2° - 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°-41° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34°-38° செல்சியஸ் இருக்கக்கூடும்.

இன்று தொடங்கி 16ம் தேதி வரை, காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல, இன்றும் நாளையும் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+