திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்ப்பதும், அதை தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து பாதிப்பை சந்தித்துள்ளதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பான உடனுக்குடன் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லைவ் பேஜில் இணைந்திருங்கள்.
Dec 20, 2023, 11:39 am IST
10, 12 பொதுத்தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்
Dec 20, 2023, 11:39 am IST
பள்ளிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததற்கு பின்பாக பள்ளிகள் திறக்கப்படும்
Dec 20, 2023, 11:38 am IST
தென் மாவட்டங்களில் பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்த பின்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்
Dec 20, 2023, 10:20 am IST
தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பு- ஆய்வை தொடங்கிய மத்திய குழு
Dec 20, 2023, 10:20 am IST
பேருந்துகளில் நிவாரண பொருட்களை கட்டணமில்லாமல் அனுப்பலாம்- தமிழக அரசு
Dec 20, 2023, 10:20 am IST
அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் நிவாரண பொருட்களை அனுப்பலாம்
வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட ஶ்ரீவைகுண்டத்தில் ராணுவ வீரர்கள்
Dec 20, 2023, 9:05 am IST
தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு 5,000 கன அடியாக குறைப்பு
Dec 20, 2023, 9:05 am IST
சென்னை- தூத்துக்குடி இடையே இன்று முதல் மீண்டும் விமான சேவை
Dec 20, 2023, 7:44 am IST
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்க சிறப்பு குழுக்கள் அமைப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
குற்றாலம் ஐந்தருவியில் மட்டும் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி
Dec 20, 2023, 7:22 am IST
மழை குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அளவு குறைந்து இருக்கிறது
Dec 20, 2023, 7:22 am IST
விரைவில் மற்ற அருவிகளிலும் குளிக்க அனுமதி அளிக்கப்படும் எனத் தகவல்
Dec 20, 2023, 7:22 am IST
அனுமதியை தொடர்ந்து ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர்
Dec 20, 2023, 7:15 am IST
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் தேங்கி நிற்கும் வெள்ளம்
Dec 20, 2023, 7:15 am IST
ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தவித்த பயணிகள் சிறப்பு ரயில் மூலம் இன்று காலை 10 மணிக்கு சென்னை வந்தடைகின்றனர்
Dec 20, 2023, 6:34 am IST
வெள்ள பாதிப்பு: தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
Dec 20, 2023, 6:34 am IST
தூத்துக்குடி, நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Dec 20, 2023, 6:33 am IST
தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Dec 20, 2023, 6:33 am IST
தூத்துக்குடி, நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆய்வு
Dec 20, 2023, 6:33 am IST
தூத்துக்குடி, நெல்லையில் மத்திய குழு இன்று ஆய்வு
Dec 20, 2023, 6:32 am IST
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் சேவை இன்று ரத்து
Dec 19, 2023, 10:34 pm IST
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் ஆய்வு செய்ய உள்ளார். மத்திய குழு நாளை தூத்துக்குடியில் ஆய்வு செய்கிறது.
Dec 19, 2023, 10:33 pm IST
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவினர் மதுரை வந்தனர்.தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே பி சிங் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் மதுரை வந்தடைந்தனர். அவர்கள் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு 4 மாவட்ட மழை வெள்ள சேதங்களை பார்வையிடுகின்றனர்.
Dec 19, 2023, 10:00 pm IST
நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி, நிவாரண பணிகளில் தேசிய பேரிடர் மீட்புத்துறை அர்ப்பணிப்புடன் பணியாற்றியது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Dec 19, 2023, 7:48 pm IST
நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை நாளை ரத்து - தெற்கு ரயில்வே
Dec 19, 2023, 7:48 pm IST
திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் ரயில் நாளை கோவில்பட்டியில் இருந்து இயக்கப்படும்
Dec 19, 2023, 7:48 pm IST
இதேபோல் நெல்லை - தாதர் விரைவு ரயில் நாளை மதுரையில் இருந்து இயக்கப்படும் -தெற்கு ரயில்வே
READ MORE
4:32 PM, 17 Dec
நெல்லை டவுன், ஏர்வாடி பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்
5:47 PM, 17 Dec
வெளுத்து வாங்கும் கனமழை - 4 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை
5:47 PM, 17 Dec
நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
6:34 PM, 17 Dec
நீர் நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் மழை பாதிப்பு குறைவாக உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். மேலும், நீர் நிலைகள் நிரம்பி காணப்படுவதால் தற்போதைய மழை சவாலாக இருப்பதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
6:46 PM, 17 Dec
நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் - தமிழ்நாடு வெதர்மேன்
6:46 PM, 17 Dec
தென் மாவட்டங்களில் 50 செமீட்டர் வரை மழை பெய்யும் - தமிழ்நாடு வெதர்மேன்
6:46 PM, 17 Dec
நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் - தமிழ்நாடு வெதர்மேன்
6:47 PM, 17 Dec
தென் மாவட்டங்களில் 50 செமீட்டர் வரை மழை பெய்யும் - தமிழ்நாடு வெதர்மேன்
7:02 PM, 17 Dec
4 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்
7:02 PM, 17 Dec
அதிகனமழை எச்சரிக்கை- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
7:04 PM, 17 Dec
4 மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முதல்வர் வலியுறுத்தியுள்ளார்
7:04 PM, 17 Dec
நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
7:05 PM, 17 Dec
கன்னியாகுமரிக்கு மட்டும் 90 வீரர்களை கொண்ட பேரிடர் மீட்பு குழு
7:30 PM, 17 Dec
தொடர்ந்து நிற்காமல் பெய்து வரும் மழையால், தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் புகுந்தது. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மழைவெள்ள நீரை கடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. மருத்துவமனையில் வாகன நிறுத்துமிடத்திலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
8:10 PM, 17 Dec
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை தொடருவதால் சில இடங்களில் பாதுகாப்புக்காக மின் தடை
8:12 PM, 17 Dec
தென்காசி: சங்கரன்கோவில் பாம்பாட்டி சித்தர் கோவில் தெப்ப சுவர் இடிந்துவிழுந்தது
8:12 PM, 17 Dec
பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகள் முழுமையான கண்காணிப்பில் உள்ளன-அமைச்சர் மனோ தங்கராஜ்
8:13 PM, 17 Dec
ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
8:13 PM, 17 Dec
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நாளை திங்கட்கிழமை நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
8:15 PM, 17 Dec
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் 10 மணிநேரத்தில் 39.4 செ.மீ. மழை பதிவு
8:16 PM, 17 Dec
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் 10 மணிநேரத்தில் 30.6 செ.மீ. மழை பதிவு
8:18 PM, 17 Dec
திருநெல்வேலியில் 1963-ல் 29 செமீ மழை பதிவானது; தற்போது இதுவரை 26 செ.மீ மழை பதிவாகி உள்ளது
8:18 PM, 17 Dec
பாபநாசம் அணை நீர்மட்டம் மொத்தம் உள்ள 143 அடியில் 134 அடியை எட்டியுள்ளது. பாபநாசம் அணையில் இருந்து 17,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
8:18 PM, 17 Dec
தென் மாவட்டங்களில் மேலும் 36 மணி நேரத்துக்கு கன மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை
8:19 PM, 17 Dec
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் அதீத கனமழை கொட்டித் தீர்க்கிறது
8:22 PM, 17 Dec
“வடகிழக்கு பருவமழை - 2023 - திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன- முதல்வர் மு.க.ஸ்டாலின்
“வடகிழக்கு பருவமழை - 2023 - திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன” என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிக்கை… pic.twitter.com/fjl9KHQiYz
குமரிக்கடல் பக்கத்திலேயே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்ந்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் நாளையும் கன மழை நீடிக்கும். நாளை மறுநாள் காலை வரை இதே மழை தொடரும்- வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
8:27 PM, 17 Dec
பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றுக்கு திறக்கப்பட்ட பெருமளவு நீர் சீறிப் பாய்கிறது
தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிநீர்இணைப்பு திட்ட கால்வாயில் உபரி நீரை வெளியேற்றி சோதனை
மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் கனவுத் திட்டமான தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிநீர்இணைப்புத் திட்டப் பணிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து எடுத்த முயற்சியின் காரணமாக… pic.twitter.com/KH0QhdfAIk