“சீரியஸ்”.. வலுவடைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! அடுத்த ஒரு வாரம் தமிழ்நாட்டில் மழை இருக்கு
சென்னை: வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று வலுவடைந்து இருப்பதாகவும், 20 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நேற்று (13.09.2023) காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (14.09.2023) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா - மேற்கு வங்காள பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

16.09.2023 மற்றும் 17.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18.09.2023 முதல் 20.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பெருந்துறை (ஈரோடு), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்) தலா 4, சோழிங்கநல்லூர் (சென்னை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) தலா 3, தாம்பரம் (செங்கல்பட்டு), கமுதி (ராமநாதபுரம்), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), திருவள்ளூர், அம்பத்தூர் (சென்னை), மலர் காலனி (சென்னை), மொடக்குறிச்சி (ஈரோடு), கொளச்சல் (கன்னியாகுமரி), விராலிமலை (புதுக்கோட்டை), பூண்டி (திருவள்ளூர்) மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), NIOT பள்ளிக்கரணை (சென்னை)தலா 2, அம்பத்தூர் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), அண்ணாநகர் (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), வளசரவாக்கம் (சென்னை), முகலிவாக்கம் (சென்னை), பெருங்குடி (சென்னை), சின்கோனா (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), காட்டுமயிலூர் (கடலூர்), வடகுத்து (கடலூர்), விருதாச்சலம் (கடலூர்), ஈரோடு, DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), DSCL விருகாவூர் (கள்ளக்குறிச்சி), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), கள்ளக்குறிச்சி, KCS மில்-2 கச்சிராயோபாலயம் (கள்ளக்குறிச்சி), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), குழித்துறை (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), தல்லி (கிருஷ்ணகிரி), நாமக்கல், புதுச்சத்திரம் (நாமக்கல்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர், வல்லம் (தஞ்சாவூர், செருமுள்ளி (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி, வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி, தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி, கொரட்டூர் (திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர், அருப்புக்கோட்டை (விருதுநகர்), திருச்செந்தூர்AWS (தூத்துக்குடி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் இன்று வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு - வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
15.09.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
16.09.2023:தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
17.09.2023 & 18.08.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications