அடுத்த ரவுண்டு ரெடி! வங்க கடலில் 7ம் தேதி உருவாகுது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. ஐஎம்டி கணிப்பு
டெல்லி: தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் வரும் 7 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர கூடும் என்றும், 12 ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்க கடலில் தமிழ்நாடு - இலங்கை கடலோர பகுதிகளை அடையும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பருவழையால் தமிழகம் முழுக்க நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 30 மற்றும் 1 ஆம் தேதிகளில் வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

குறிப்பாக தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புயலின் கோரத்தாண்டவத்தால், அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அந்த 3 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும் இந்த புயல் காரணமாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டியதால், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கனமழை பெய்த நிலையில், தற்போது தமிழகம் முழுக்க மழை அவ்வளவாக இல்லை. சென்னையிலும் இன்று பகல் முழுக்க சுள்ளென்று வெயில் தான் அடித்தது. நேற்று இரவு திடீர் மழை பெய்து சர்பிரைஸ் கொடுத்தது. இன்று அதிகாலையும் லேசான மழை பெய்தது. தமிழகத்தில் அடுத்த ஒருவாரத்திற்கு அதாவது வரும் 11 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிபட்ச வெப்ப நிலை 32-33 டிகிரி செல்சியஸ்சை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்ப நிலை 25-26 டிகிரி செல்சியை ஒட்டியும் இருக்க கூடும் என்று தெரிவித்துள்ளது.
மழை சற்று லீவு விட்டது போல தெரிந்துள்ள நிலையில், அடுத்த ரவுண்டுக்கு ரெடியானது என்பது போல வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் வரும் 7 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மேற்கு - வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்றும், வரும் 12ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக் கடலில் தமிழ்நாடு - இலங்கை கடலோர பகுதிகளை அடையக் கூடும் எனவும் கணிக்கபட்டுள்ளது.
-
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications