உருவாகியது 2 புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரம் இப்படித்தான்.. சென்னையில் மழைக்கு சான்ஸ்
சென்னை: தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதியும், குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியும் உருவாகி இருக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிக தீவிரமாக இருந்தது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அநேக இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

அடுத்த ஒரு வார அப்டேட்
குறிப்பாக நீலகிரி அவலாஞ்சியில் 21 செமீ மழை பதிவானது. கோவை வால்பாறை, சோலையார் பகுதியில் தலா 8 செமீ மழை பெய்துள்ளது. இன்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்தது. இந்த நிலையில் இன்றும் நாளையும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
நேற்று வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (17-06-2025) காலை 05.30 மணி அளவில், தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும்.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள்
நேற்று தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (17-06-2025) காலை 05.30 மணி அளவில், குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த ஒரு தாழ்வுப்பகுதி உருவாகி, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையை நோக்கி நகரக்கூடும்.
இன்று எங்கெல்லாம் மழைக்கு சான்ஸ்
17-06-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
18-06-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 19-06-2025 முதல் 23-06-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் 2 நாட்களுக்கு எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (17-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (18-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 17-06-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடதமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
18-06-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 19-06-2025 முதல் 21-06-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்:
17-06-2025: மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல், ஆந்திர கடலோரப்பகுதிகள், வடக்கு-மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
18-06-2025: வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடலின் ஒருசில பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு வங்கக்கடலின் ஒருசில பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
19-06-2025: வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு வங்கக்கடலின் ஒருசில பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
20-06-2025: மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், இதர வடக்கு மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21-06-2025: மத்தியமேற்கு மற்றும் அ அதனை ஒட்டிய மத்தியாகிழக்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
17-06-2025 மற்றும் 18-06-2025: மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், குஜராத், கொங்கன் மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள், கோவா-கர்நாடகா. கேரளா கடலோரப்பகுதிகள், லட்சதீவு மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
19-06-2025: மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், குஜராத் மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள், கோவா-கர்நாடகா கடலோரப்பகுதிகள், லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
20-06-2025 மற்றும் 21-06-2025: மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடலின் மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய அரபிக்கடல், குஜராத், கோவா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பதிவான மழை அளவு (செமீ):
* அவலாஞ்சி (நீலகிரி) 21,
* பாற்சன் வேலி (நீலகிரி) 11.
* போதிமுண்டு (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி) தலா 10,
* வால்பாறை PTO (கோயம்புத்தூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 9,
* சோலையார் (கோயம்புத்தூர்) 8.
* விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), எமரால்டு (நீலகிரி), பெரியாறு (தேனி) தலா 7.
* உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), தேவாலா (நீலகிரி), மேல்
கூடலூர் (நீலகிரி) தலா 6,
* கூடலூர் பஜார் (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம்
* (கோயம்புத்தூர்) தலா 5, நடுவட்டம் (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி), கிளன்மார்கன் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), தேக்கடி (தேனி), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 4,
* ஊத்து (திருநெல்வேலி) 3,
* காக்காச்சி (திருநெல்வேலி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), குண்டாறு அணை (தென்காசி), கருப்பாநதி அணை (தென்காசி), நெய்யூர் AWS (கன்னியாகுமரி), குந்தா பாலம் (நீலகிரி). பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), மாஞ்சோலை (திருநெல்வேலி), கிணத்துக்கடவு (கோயம்புத்தூர்), செங்கோட்டை (தென்காசி) தலா 2 செமீ மழை பெய்துள்ளது.
* சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), அடவிநயினார் அணை (தென்காசி) கன்னியாகுமரி (கன்னியாகுமரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), கொட்டாரம் (கன்னியாகுமரி), குளச்சல் (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி). கேத்தி (நீலகிரி), தென்காசி AWS (தென்காசி), மணல்மேடு ARG (மயிலாடுதுறை), உதகமண்டலம் (நீலகிரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி). முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), தென்காசி (தென்காசி), கன்னிமார் (கன்னியாகுமரி) மதுக்கரை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), ஆழியார் (கோயம்புத்தூர்), TNAU கோயம்புத்தூர் (கோயம்புத்தூர்), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்). குருந்தன்கோடு (கன்னியாகுமரி) தலா ஒரு செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications