வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறும் பட்சத்தில் இதற்கு டானா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயர் கத்தார் நாடு பரிந்துரைத்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது. ஆரம்பமே அசத்தல் என்பதை போல் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து தமிழகத்தில் பரவலாக மழையை கொடுத்தது.

இந்த ஆண்டு லாலினோ ஆண்டு என்பதால் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை தமிழகத்திற்கு கிடைக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் அக்டோபர் 21 வாக்கில் ஒரு குறைந்த காற்றழுத்தம் வங்கக் கடலில் உருவாகும் என சொல்லப்பட்டது. அந்த வகையில் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது.
இது தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என மாறி, நாளை மறுநாள் புயலாக மாறும். இந்த புயலுக்கு டானா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு பகுதியை நோக்கி ஒடிஸா, மேற்கு வங்கத்திற்கு நகரும்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக் கடலில் உருவாக போகும் முதல் புயல் இதுதான். இந்த புயலானது தமிழகத்திற்கானது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நவம்பர் மாதம் முதல் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications