வங்க கடலில் சம்பவம்.. நாளை இரவு கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..வானிலை மையம் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் நாளை இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது என்றும் தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி வரை மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:- நேற்று (07-09-2024) காலை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதி, இன்று (08-09-2024) காலை 05:30 மணி அளவில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுபெற்று, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08:30 மணி அளவில் கலிங்கபட்டினத்திற்கு (ஆந்திரா) கிழக்கே 280 கீ.மீ, கோபால்பூற்கு (ஓடிசா) கிழக்கு-தென்கிழக்கே 230 கீ.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

rain chennai

மழை தொடரும்: இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மேற்கு வங்காளம் கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, 9 ஆம் தேதி மாலை/இரவு வாக்கில் ஓடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரையை பூரி (ஒடிசா) - தீகா (மேற்கு வங்காளம்) இடையே கடக்க கூடும்.

08.09.2024 மற்றும் 09.09.2024: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 10.09.2024 முதல் 14.09.2024 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் எப்படி?: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகள்: 08.09.2024 மற்றும் 09.09.2024: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

10.09.2024 முதல் 12.09.2024 வரை : மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்: 08.09.2024 மற்றும் 09.09.2024: வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், ஆந்திரகடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு- மத்திய- வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

10.09.2024:வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திரகடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு- மத்திய-வடகிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

12.09.2024: தென்கிழக்கு, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு- மத்திய வங்கக்கடல், வடக்கு ஆந்திரகடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்: 08.09.2024 முதல் 12.09.2024 வரை: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழை அளவு: சின்கோனா (கோயம்புத்தூர்) 5, வால்பாறை PTO (கோயம்புத்தூர்) சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 4, திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), செய்யார் (திருவண்ணாமலை). காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) தலா 3, வேலூர் (வேலூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), சோலையார் (கோயம்புத்தூர்), செய்யார் ARG (திருவண்ணாமலை), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), ஒசூர் (கிருஷ்ணகிரி), வாலாஜா (ராணிப்பேட்டை), ஆற்காடு (ராணிப்பேட்டை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) தலா 2,

அம்மாபேட்டை (ஈரோடு), மகாபலிபுரம் AWS (செங்கல்பட்டு), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), ஏற்காடு (சேலம்), ஓசூர் AWS (கிருஷ்ணகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), ஆரணி (திருவண்ணாமலை), ராணிப்பேட்டை (ராணிப்பேட்டை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), வாணியம்பாடி (திருப்பத்தூர்), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), காரைக்கால் (காரைக்கால்), காட்பாடி (வேலூர்) தலா 1.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+