டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்.. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி! டிசம்பர் 3 வரை நான்-ஸ்டாப் மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காலதாமதாகி நாளை உருவாகும் என வானிலை மையம் இன்று காலை தெரிவித்து இருந்த நிலையில், இன்றே உருவாகி விட்டதாகவும், டிசம்பர் 3 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், "இன்று (27-11-2023) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும்.

Low pressure region formed in bay of bengal and possibility of rain till December 3

மேலும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 27.11.2023 முதல் 29.11.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30.11.2023 முதல் 03.12.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் (காஞ்சிபுரம்) 10, மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) தலா 6, மண்டலம் 12 மீனம்பாக்கம் (சென்னை), போளூர் (திருவண்ணாமலை), சோழவரம் (திருவள்ளூர்) 5, மரக்காணம் (விழுப்புரம்), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), மண்டலம் 13 அடையார் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்) தலா 5,

அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை), மண்டலம் 06 திரு.வி.க.நகர் (சென்னை), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை), எண்ணூர் AWS (சென்னை), திருப்போரூர் (செங்கல்பட்டு), மண்டலம் 13 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), மண்டலம் 12 D156 முகலிவாக்கம் (சென்னை), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), பெரம்பூர் (சென்னை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), அம்பத்தூர் (சென்னை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), பெருங்குடி (சென்னை), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), செம்பரம்பாக்கம்-வருவாய்த்துறை (காஞ்சிபுரம்), மண்டலம் 07 U18 D81 வானகரம் (சென்னை), மண்டலம் 14 பெருங்குடி (சென்னை), தரமணி ARG (சென்னை), மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை) தலா 4,

காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), YMCA நந்தனம் ARG (சென்னை), மண்டலம் 13 U39 அடையார் (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு), திண்டிவனம் (விழுப்புரம்), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), செங்குன்றம் (திருவள்ளூர்), மண்டலம் 14 U41 பெருங்குடி (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), எம்ஜிஆர் நகர் (சென்னை), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), அடையாறு (சென்னை), மண்டலம் 03 புழல் (சென்னை), சிதம்பரம் (கடலூர்), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), செம்பரம்பாக்கம்-CMWSSB (காஞ்சிபுரம்), ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் (திருப்பூர்), பல்லடம் (திருப்பூர்), திரு.வி.க நகர் (சென்னை), ஆற்காடு (ராணிப்பேட்டை), தொண்டி (ராமநாதபுரம்) 3, மண்டலம் 03 மாதவரம் (சென்னை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), சென்னை விமானநிலையம் (சென்னை), ஆலந்தூர் (சென்னை) 3, திருப்பூர் தெற்கு (திருப்பூர்), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), மாதவரம் (சென்னை), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), தேனாம்பேட்டை (சென்னை), மீனம்பாக்கம் AWS (சென்னை) தலா 3,

CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), விருதாச்சலம் (கடலூர்), ஆலந்தூர் (செங்கல்பட்டு), எடப்பாடி (சேலம்), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), மண்டலம் 02 மணலி (சென்னை), கொளப்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), வேலூர் (வேலூர்), வேப்பூர் (கடலூர்), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), செய்யார் (திருவண்ணாமலை), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), தண்டையார்பேட்டை (சென்னை), சென்னை (N) AWS (சென்னை), சென்னை (N) AWS (சென்னை), வளசரவாக்கம் (சென்னை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), திருவொற்றியூர் (சென்னை), மண்டலம் 11 U32 மதுரவாயல் (சென்னை), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்), பழனி (திண்டுக்கல்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்) , பூந்தமல்லி (திருவள்ளூர்), கடலூர் (கடலூர்), திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் (திருப்பூர்), குருங்குளம் (தஞ்சாவூர்), KCS மில்-2 மூரர்பாளையம் (கள்ளக்குறிச்சி), குண்டடம் (திருப்பூர்), புழல் ARG (திருவள்ளூர்), ராணிப்பேட்டை (ராணிப்பேட்டை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), குப்பநத்தம் (கடலூர்), மின்னல் (ராணிப்பேட்டை), தம்மம்பட்டி (சேலம்), BASL முகையூர் (விழுப்புரம்), மாயனூர் (கரூர்), மண்டலம் 05 GCC (சென்னை), அம்பத்தூர் (சென்னை) தலா 2,

ஆரணி (திருவண்ணாமலை), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), மாரண்டஹள்ளி (தர்மபுரி), கோடநாடு (நீலகிரி), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை), சோழவரம் (திருவள்ளூர்), அம்முண்டி (வேலூர்), ஒட்டன்சத்திரம் (தர்மபுரி), மண்டலம் 02 D15 மணலி (சென்னை), மேற்கு தாம்பரம்_SIT ARG (செங்கல்பட்டு), விருதாச்சலம் KVK AWS (கடலூர்), திருவூர் AWS (திருவள்ளூர்), உப்பாறு அணை (திருப்பூர்), தலைவாசல் (சேலம்), பரமத்திவேலூர் (நாமக்கல்), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), கோடம்பாக்கம் (சென்னை), சங்கரி துர்க்கம் (சேலம்), அரூர் (தர்மபுரி), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), குன்னூர் PTO (நீலகிரி), KCS மில்-2 கச்சிராப்பாளையம் (கள்ளக்குறிச்சி), கிருஷ்ணராயபுரம் (கரூர்), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), பவானி (ஈரோடு), திருவள்ளூர் (திருவள்ளூர்), ஆத்தூர் (சேலம்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), போதானூர் இரயில் நிலையம் (கோயம்புத்தூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), பூதலூர் (தஞ்சாவூர்), பாண்டவரடி (திருவாரூர்) 1, குமாரபாளையம் (நாமக்கல்), குந்தா பாலம் (நீலகிரி), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), கின்னக்கோரை (நீலகிரி), கேத்தி (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), KCS மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), காட்டுமயிலூர் (கடலூர்), பொன்னேரி (திருவள்ளூர்), DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), ஜெயம்கொண்டம் (அரியலூர்), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), அண்ணா நகர் (சென்னை), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), பெலாந்துறை (கடலூர்), திருவாரூர் (திருவாரூர்), சிதம்பரம் AWS (கடலூர்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), திருவாலங்காடு (திருவள்ளூர்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), பூண்டி (திருவள்ளூர்), KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), விராலிமலை (புதுக்கோட்டை), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), மதுக்கரை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), காட்பாடி (வேலூர்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), கல்லக்குடி (திருச்சிராப்பள்ளி), குடியாத்தம் (வேலூர்), விழுப்புரம் (விழுப்புரம்), கல்லிக்குடி (மதுரை), அரக்கோணம் (ராணிப்பேட்டை), திருத்தணி (திருவள்ளூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), வனமாதேவி (கடலூர்), வாலாஜா (ராணிப்பேட்டை), எறையூர் (பெரம்பலூர்), கோயம்புத்தூர்-தெற்கு (கோயம்புத்தூர்), பர்லியார் (நீலகிரி), திருவையாறு (தஞ்சாவூர்), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), மேலாலத்தூர் (வேலூர்), பொன்னமராவதி (புதுக்கோட்டை), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்), கொரட்டூர் (திருவள்ளூர்), பெருந்துறை (ஈரோடு), அரியலூர் PTO (அரியலூர்), RSCL வல்லம் (விழுப்புரம்), தாலுகா அலுவலகம் அரியலூர் (அரியலூர்), ஆவடி (திருவள்ளூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), கொடுமுடி (ஈரோடு), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), தழுதலை (பெரம்பலூர்), SRC குடிதாங்கி (கடலூர்), வாடிப்பட்டி (மதுரை), காரையூர் (புதுக்கோட்டை) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+