காற்றழுத்த தாழ்வு பாதை.. இன்று 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று சென்னை உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை கேகே நகரில் 5 செமீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. இந்த நிலையில், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று அப்படியே கிளைமேட் மாறியிருக்கிறது. குறிப்பாக தலைநகர் சென்னையே குளிர்ந்து போய் உள்ளது. நேற்று வரை அனலாக தகித்த சென்னை இன்று அப்படியே ஜில்லென மாறியிருக்கிறது. இன்று திடீரென சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டியது.

Low Pressure System Triggers Heavy Rain in 3 Districts Chennai Likely to Receive Showers Today

காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சிவகங்கை, விருதுநகர், தேனி என பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் இன்று தேனி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும். வரும் 11 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று சென்னையிலும் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பாதை

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சுமார் 0.9 கிமீ உயரத்தில், தெலஙகாணா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் முதல மன்னார் வளைகுடா வரை ராயலசீமா, தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இன்று 06-04-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


11 ஆம் தேதி வரை மழை

* 07-04-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 08-04-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

* 09-04-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 10-04-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

* 11-04-2026 மற்றும் 12-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

06-04-2026 மற்றும் 07-04-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்ப யாக உயரக்கூடும். 08-04-2026 முதல் 10-04-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.

சென்னையில் கிளைமேட் எப்படி?

சென்னையில் இன்று (06-04-2026): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை (07-04-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+