Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையில் 54 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபரில் அதிக மழை! கட்டிலே மூழ்கும் அளவுக்கு மழைநீர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் 54 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் கனமழை பெய்துள்ளது. இந்த முறை 15 நிமிடங்களில் 4.5 செ.மீ. மழை பெய்து பெரும்பாலான இடங்கள் வெள்ளப்பெருக்காக காட்சியளிக்கின்றன.

பல குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து கட்டில் மூழ்கும் அளவுக்கு மழை தேங்கியதால் குடியிருப்புவாசிகள் தூக்கத்தை தொலைத்துவிட்டு அவதியடைந்துள்ளனர். மதுரையில் கனமழை குறித்து அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோருடன் காணொலி காட்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.

weather madurai rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த நிலையில் மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களில் அண்மைக்காலமாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன் தினம் இரவும் பலத்த மழை பெய்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. குறிப்பாக செல்லூர், முல்லை நகர், புதூர், கூடல்புதூர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

குறிப்பாக புறநகர் பகுதிகளில் 3 மணி முதல் 3.15 மணி வரை 15 நிமிடங்களில் மட்டும் 4.5 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. அது போல் காலை முதல் மாலை வரை 9.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புறநகர் பகுதிகளான சர்வேயர் காலனி, புதூர், பனங்காடி, பாரத நகர், பி.பி. குளம், முல்லை நகர் பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.

மதுரை கூடல் நகர் பொதிகை நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்த முதியோர் கடும் அவதியடைந்துள்ளனர். அது போல் மதுரை நகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் சாரல் மழை மட்டுமே பெய்தது. உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தொட்டப்பநாயக்கனூர், செட்டியபட்டி, வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி, அல்லிகுண்டம், வாலாந்தூர், செல்லம்பட்டி, உத்தப்பநாயக்கனூர், வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

கனமழை காரணமாக வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி, சடையாண்டிபட்டி பகுதிகளில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை முடுக்கிவிடுமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த நிலையில் 54 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் மாதம் இது போல் ஒரு பெரிய மழை பெய்துள்ளது. அதாவது 1970 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 99 மி.மீ. மழை பெய்திருந்தது. அதன் பிறகு அக்டோபரில் தற்போதுதான் அதிகபட்ச மழை பெய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+