சம்பவம்.. இது மதுரைக்கான நாள்.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன சூப்பர் செய்தி.. இதை பாருங்களேன்
சென்னை: தமிழ்நாட்டில் அங்கங்கே கனமழை பெய்து வரும் நிலையில் இது மதுரைக்கான நாள் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள போஸ்டில், இது மதுரைக்கான நாள். மதுரை நகரில் இடியுடன் கூடிய பலத்த மழையுடன் இருந்தது.

தல்லாகுளம் 123.89 மிமீ மழை பெய்துள்ளது
மதுரை வடக்கு 94.50 மிமீ மழை பெய்துள்ளது
வாடிப்பட்டி 52.20 மிமீ மழை பெய்துள்ளது
கல்லந்திரி 41.50 மிமீ மழை பெய்துள்ளது
விரகனூர் 39.60 மிமீ மழை பெய்துள்ளது
மேலூர் 36.00 மிமீ மழை பெய்துள்ளது
சித்தம்பட்டி 34.50 மிமீ மழை பெய்துள்ளது
இடையபட்டி 34.20 மிமீ மழை பெய்துள்ளது
தானியமங்கலம் 33.00 மிமீ மழை பெய்துள்ளது
திருமங்கலம் 32.80 மிமீ மழை பெய்துள்ளது
பெரியபட்டி 27.50 மிமீ மழை பெய்துள்ளது
ஏழுமலை 24.10 மிமீ மழை பெய்துள்ளது
புலிப்பட்டி 23.90 மிமீ மழை பெய்துள்ளது
சத்தியார் 19.50 மிமீ மழை பெய்துள்ளது என்று கூறியுள்ளார்.
முன்னதாக தமிழ்நாட்டிற்கு கனமழை கொடுக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்னும் சில நாட்களில் உருவாக உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில நாட்களில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நமக்கு மிகப்பெரிய பாதுகாவலாக இருக்க போகிறது. இந்த யுஏசி பரவலான மழையைக் கொடுக்கும். மேலும் இந்த காற்று கிழக்கு தமிழ்நாட்டிற்கு திரும்பும். எனவே வெப்ப அலைகள் அடுத்த வாரங்களுக்கு இருக்காது.
2014 மே மாதம் இதேபோன்ற அமைப்பு தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெரும் மழையை வழங்கியது எனக்கு நினைவிருக்கிறது. இன்னும் சிறப்பான நாட்கள் நமக்கு காத்திருக்கின்றன, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நல்ல நாட்கள்: மேலும் தமிழ்நாட்டிற்கு வானிலை ரீதியாக நல்ல காலம் பொறக்குது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
ஜெய் ஜக்கமா நல்ல காலம் பொறக்க போவது !!! உச்ச கோடை வெயில் குறைய போகுது, தமிழ்நாட்டில் நல்ல மழை வர போகுது, என்று கூறியுள்ளார்.
வானிலை மையம்: இன்று முதல் 15ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். சென்னையில் அதிகாலையில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும்.
டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருந்தது.
அதிக பட்ச வெப்பநிலை ஈரோடு மற்றும் வேலூரில் 40.0" செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3639° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-37 செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22-29° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 37.2 செல்சியஸ் (1.2° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.4° செல்சியஸ் (1.0 செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications