பேய் மழை அடிச்சு வெளுக்க போகுது! ராத்திரி நேரத்தில் மெகா சம்பவம்! 20 மாவட்டங்களை மார்க் செய்த ஐஎம்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், நாகை, தென்காசி, நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருவது மக்களுக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது.

weather Rain Tamil Nadu

குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழைக்கு பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது வடக்கு திசை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இன்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், 20 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன்காரணமாக இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். குறிப்பாக, தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், நாகை, தென்காசி, நெல்லை, கோவை ஆகிய 20 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+