ஒரு நொடி உறைந்த சென்னைவாசிகள்.. சுத்தி சுழற்றியடித்த கனமழை! நினைவுக்கு வந்த மிக்ஜாம் புயல், வெள்ளம்
சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று மீண்டும் கனமழை கொட்டித்தீர்த்தது.
தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று மிக கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

அதேபோல் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
இந்த நிலையில் நேற்று தமிழ்நாட்டின் பல இடங்களில் கனமழை விட்டுவிட்டும், சில இடங்களில் தொடர் மழையும் பெய்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெரு மழை பதிவாகி உள்ளது. சென்னையிலும் அதிகளவில் மழை பெய்து உள்ளது. நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 5.30 மணி வரை சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 92 மிமீ மழை கொட்டித் தீர்த்ததாக தானியங்கி வானிலை நிலையம் பதிவு செய்து உள்ளது.
"வானிலை கண்காணிப்பகங்கள்: மீனம்பாக்கம் (சென்னை) - 43.7 மிமீ, நுங்கம்பாக்கம் (சென்னை) - 40.3 மிமீ
தானியங்கி வானிலை நிலையங்கள்: எண்ணூர் துறைமுகம் (சென்னை) - 92.0 மிமீ, விஐடி சென்னை (செங்கல்பட்டு) - 53.5 மிமீ, மீனம்பாக்கம் இஸ்ரோ (சென்னை) - 45.0 மிமீ, நுங்கம்பாக்கம் (சென்னை) - 34.5 மிமீ
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) - 6.5 மிமீ, திருச்செந்தூர் (தூத்துக்குடி) - 0.5 மிமீ
தானியங்கி மழை அளவீடு நிலையங்கள்: சத்யபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) - 70.5 மிமீ, தரமணி (சென்னை) - 47.0 மிமீ, எல்மோயிஸ் கோலப்பாக்கம் (காஞ்சிபுரம்) - 46.5 மிமீ, ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை) - 42.0 மிமீ, நியாட் பள்ளிக்கரணை (சென்னை) - 41.3 மிமீ, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) - 37.5 மிமீ, புழல் (திருவள்ளூர்) 28.0 மிமீ, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்) - 25.5 மிமீ, குட் வில் பள்ளி வில்லிவாக்கம் (திருவள்ளூர்) - 19.5 மிமீ (இரவு 11.30 வரை), சத்தான்குளம் (தூத்துக்குடி) - 4.0 மிமீ, இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) - 0.5 மிமீ" என்று குறிப்பிட்டு உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications