விடாது பெய்த மழை.. அழுகும் பயிர்கள்! பருவமழையால் விவசாயிகள் கடும் பாதிப்பு! அரசுக்கு வைத்த கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மாப்படுகை, பொன்னூர் பாண்டூர் மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானதால் விவசாயிகள் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

Mayiladuthurai Heavy Rain

கடந்த 24 மணி நேரத்தில் இன்று காலை 6 மணி வரை மாவட்டத்தில் சராசரியாக மூன்று சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. புயல் சின்னம் காரணமாக நேற்று 25 ஆம் தேதி முதல் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

மறு அறிவிப்பு வரும்வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, சின்னூர்பேட்டை, சந்திரபாடி, சின்னங்குடி, பூம்புகார், வானகிரி, கொடியம்பாளையம், பழையாறு, திருமுல்லைவாசல், கூழையார், தொடுவாய், மாணிக்கப்பங்கு, வெள்ளக்கோவில், குட்டியாண்டியூர், சின்னமேடு உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

இதனால், 750-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்களுடன் துறைமுகங்கள் மற்றும் ஆற்றின் முகத்துவாரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இரண்டாவது நாளாக கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

கடந்த நான்கு தினங்களில் மொத்தம் சராசரியாக 10 சென்டிமீட்டர் அளவிற்கு மாவட்டம் முழுவதும் மழை பெய்துள்ள நிலையில் வயல்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. தண்ணீர் வெளியேறி செல்லும் வடிகால் வாய்க்கால்கள் தூர்ந்து போய் உள்ளதால் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற முடியாமல் வயல்வெளிகளில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா இளம் நாற்றுகள் நீரில் மூழ்கியுள்ளன.

பண்டாரவடை மாப்படுகை, அருண்மொழிதேவன், பொன்னூர், பாண்டூர், மணலூர், திருவிழந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் நான்கு தினங்களில் பெய்த மழையால் நீர் வடிய வழியின்றி சம்பா நடுவு செய்திருந்த வயல்களில் நடவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வேர்கள் அழுகி மிகவும் பாதித்துள்ளது.

இந்த கிராமங்களின் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் நீரில் மூழ்கி சம்பா பயிர் பாதித்துள்ளது. தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட நாற்றுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+