இன்றும் வெளுத்து வாங்கப்போகும் மழை.. சென்னை மக்களுக்கும் அலர்ட்! 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "நேற்று (24.07.2023) மாலை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது இன்று (25.07.2023) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 27.07.2023 முதல் 31.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): அவலாஞ்சி (நீலகிரி) 38, சின்னகல்லாறு (கோயம்புத்தூர்) 12, மேல் பவானி (நீலகிரி) 11, வொர்த் எஸ்டேட் (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), தேவாலா (நீலகிரி) தலா 9, சின்கோனா (கோயம்புத்தூர்) 8, சோலையார் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி) தலா 7, ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி) 6, டிஜிபி அலுவலகம் (சென்னை), கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி) தலா 5, நடுவட்டம் (நீலகிரி), க்ளென்மார்கன் (நீலகிரி), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) தலா 4, தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), எமரலாடு (நீலகிரி), தாம்பரம் (செங்கல்பட்டு), எம்ஜிஆர் நகர் (சென்னை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), ஆலந்தூர் (சென்னை), சென்னை விமான நிலையம், நந்தனம் ARG (சென்னை), மேற்கு தாம்பரம் ARG (சென்னை) தலா 3, நாலுமுக்கு (திருநெல்வேலி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), ஊத்து (திருநெல்வேலி), பாப்பாரப்பட்டி KVK AWS (தருமபுரி), PWD மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), கல்லட்டி (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), பெரியார் (தேனி), குந்தா பாலம் (நீலகிரி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), திருப்போரூர் (செங்கல்பட்டு), தாமரைப்பக்கம் (திருவள்ளூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), பென்னாகரம் (தருமபுரி), சூரலக்கோடு (கன்னியாகுமரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), செங்கல்பட்டு, ராசிபுரம் (நாமக்கல்), கொடநாடு (நீலகிரி), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பாலக்கோடு (தருமபுரி), பொன்னை அணை (வேலூர்), உதகமண்டலம் (நீலகிரி), ஆனைமடுவு அணை (சேலம்), சோழவரம் (திருவள்ளூர்), பள்ளிக்கரணை ARG (சென்னை) தலா 2, பூந்தமல்லி (திருவள்ளூர்), காக்காச்சி (திருநெல்வேலி), தேக்கடி (தேனி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), சந்தியூர் KVK AWS (சேலம்), ராயக்கோட்டா (கிருஷ்ணகிரி), குன்னூர் PTO (நீலகிரி), பாலமோர் (கன்னியாகுமரி), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), தருமபுரி PTO, ஆவடி (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), ஆழியாறு (கோயம்புத்தூர்), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), தக்கலை (கன்னியாகுமரி), குன்னூர் (நீலகிரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), பாரூர் (கிருஷ்ணகிரி), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), பாலர் அணைக்கட்டு (இராணிப்பேட்டை), ஆரணி (திருவண்ணாமலை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), பொன்னேரி (திருவள்ளூர்), தலைவாசல் (சேலம்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), ஆம்பூர் (திருப்பத்தூர்), திற்பரப்பு (கன்னியாகுமரி), திருப்பத்தூர், பெரம்பூர் (சென்னை), கிணத்துக்கடவு (கோயம்புத்தூர்), மாதவரம் AWS (திருவள்ளூர்), தருமபுரி, டேனிஷ்பேட்டை (சேலம்), பர்லியார் (நீலகிரி), கரியகோவில் அணை (சேலம்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), தளி (கிருஷ்ணகிரி), சென்னை நுங்கம்பாக்கம், மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), கிருஷ்ணகிரி, நெடுங்கல் (கிருஷ்ணகிரி), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), கோத்தகிரி (நீலகிரி), Rscl-2 கோலியனூர் (விழுப்புரம்), தம்மம்பட்டி (சேலம்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), புழல் ARG (திருவள்ளூர்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), ஏதாப்பூர் (சேலம்), பூண்டி (திருவள்ளூர்), எண்ணூர் AWS (திருவள்ளூர்), கள்ளக்குறிச்சி, திரூர் KVK AWS (திருவள்ளூர்), விழுப்புரம் (விழுப்புரம்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), சின்னார் (கிருஷ்ணகிரி), KRP அணை (கிருஷ்ணகிரி), போளூர் (திருவண்ணாமலை), மேட்டூர் (சேலம்) தலா 1.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications