கேரளாவுக்கு போறீங்களா? வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கையை பாருங்க.. 2 மாதத்திற்கு இதுதான் நிலை
திருவனந்தபுரம்: கேரளாவில் பருவமழை குறைந்துள்ள நிலையில் அம்மாநிலத்தில் கடுமையான வெயில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தென் மேற்கு பருவமழையானது மே மாதம் இறுதியிலும், ஜூன் மாதம் 1ம் தேதியும் தொடங்கும். ஆனால் இந்த முறை எதிர்பார்த்ததைவிட ஒரு வாரம் தாமதமாகவே தொடங்கியது. இந்த மழையால் முதலில் பயன்பெறும் மாநிலம் கேரளம்தான். அதன் பின்னர்தான் தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும். அதனால்தான் எப்போதும் கேரளா செழிப்பாகவும், பசுமையாகவும் இருக்கிறது. ஏராளமான சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது.

ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைந்ததால் பல இடங்களில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் 90 சதவிகிதமும், அதற்கு முன்னர் ஜூன் மாதத்திலும் பருவமழை 65 சதவிகிதம் என மொத்தமாக இந்த முறை பருவமழை 45 சதவிகிதம் குறைந்திருக்கிறது. மாவட்ட வாரியாக இடுக்கியில் இயல்பை விட 60 சதவீதத்திற்கும் குறைவாகவும். வயநாட்டில் 55 சதவீதமும், கோழிக்கோடு மாவட்டத்தில் 53 சதவீதமும் மழை குறைந்துள்ளது.
இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக இயல்பைவிட வெப்பம் அதிகரித்திருக்கிறது. கேரளா ஜில்லென இருக்கும் என நம்பி வந்த சுற்றுலா பயணிகளை இந்த வெயில் வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. அதாவது, "மழை குறைவு காரணமாக வறட்சி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு உள்பட ஒன்பது மாவட்டங்களில் இன்று வெப்பநிலை மூன்று முதல் ஐந்து டிகிரி வரை அதிகரிக்கும்" என்று கூறியுள்ளது.
பருவமழை குறைந்ததன் காரணமாக அணைகளுக்கான நீர் வரத்தும் குறைந்திருக்கிறது. கேரள மின்சார வாரியத்திற்குச் சொந்தமான அணைகளில், 37 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது. எனவே மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் பரவலாக மின்வெட்டாக எதிரொலித்திருக்கிறது. கடுமையான வெயில் மற்றும் மின்வெட்டு காரணமாக கேரள மக்கள் செய்வது அறியாது திகைத்து வருகின்றனர். அடுத்த இரண்டு மாதங்களுக்கும் கேரளாவில் பருவமழை குறைாவகதான் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications