அடிச்சு வெளுக்கப் போகுது மழை.. ஊட்டியாக மாறப் போகுது ‘இந்த’ மாவட்டங்கள்! குடையை மறக்காதீங்க மக்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. குறிப்பாக கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என கணித்துள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்ட தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. பொதுவாக ஆவணி மாதத்தில் ஓரளவு தான் மழை இருக்கும் என்றாலும் தற்போது நல்ல மழைப் பொழிவு இருக்கிறது.

weather tamil nadu rain rain

இதனால் ஆடிப்பட்டம் விதைத்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,"மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 இலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வடக்கு ஆந்திரகடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள், தெற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+