மழைக்கு தேதி குறிச்சாச்சி.. கொளுத்தும் வெயிலுக்கு நடுவே குட்நியூஸ்.. வானிலை மையத்தின் ஜில் அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் தீவிரமாக இருக்கும் நிலையில், அடுத்த மாதம் தொடக்கத்தில் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடங்கிய பருவமழை, இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையுடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை 10 மணி வரை கூட பனி மூட்டம் பல பகுதிகளில் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து தற்போது வெயில் தீவிரமடைந்திருக்கிறது.

பிப்ரவரி மாதம் இறுதி தொடங்கி தற்போதுவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் அடுத்த மாதம் தொடக்கத்தில் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது, "தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே, இன்று முதல் வரும் 1ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதே ஏப்ரல் 2 மற்றும் 4ம் தேதிகளில் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில், இன்று தொடங்கி ஏப்ரல் மாதம் 2ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடியில் 4 செ.மீ, காயல்பட்டினத்தில் (தூத்துக்குடி) 3 செ.மீ, கன்னியாகுமரி, கருப்பாநதி அணை (தென்காசி) தலா 1 செ.மீ மழையும் பெய்திருக்கிறது" என்று வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அதேபோல மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
தற்போது தேர்தல் காலகட்டம் என்பதால் பிரசாரத்தில் பங்கேற்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க, தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். அப்போதுதான் உடலில் நீர் குறையாமல் இருக்கும். வீட்டில் தயாரித்த நீர்மோர், லஸ்ஸி, பழைய சோறுக் கஞ்சி , எலுமிச்சை ஜூஸ் போன்ற பானங்களை அருந்தினால் நீர் குறைவுப் பிரச்னை இருக்காது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள்












Click it and Unblock the Notifications