தென் தமிழகத்தை விடுங்க.. டெல்டாவுக்கு பறந்த மழை அலர்ட்! இந்த 5 மாவட்டங்கள் கவனமா இருக்கனும்
சென்னை: தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் வீரியம் தற்போதுதான் குறைந்திருக்கிறது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
தமிழ்நாட்டின் குடிநீர் தேவையை வழக்கமாக தென்மேற்கு பருவமழை தீர்த்து வைத்துவிடும். இது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். ஆனால் இந்த முறை எதிர்பார்த்த மழை பொழியவில்லை. எனவே தமிழ்நாட்டு மட்டுமல்லாது தென்னிந்தியாவே பெரும் நெருக்கடியை எதிர்க்கொண்டது. குறிப்பாக கேரளாவில் அணைகளுக்கு நீர் போதுமான அளவு வராததால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. மறுபுறம் விளை நிலங்களும் போதுமான நீர் இன்றி வறட்சியடைய தொடங்கின.

கர்நாடகாவின் நீர் பிடிப்ப பகுதிகளில் மழை லேசாக தலையை காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டதால், அம்மாநிலத்தின் அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது. எனவே மேட்டூர் அணைக்கான நீர் வரத்து குறைந்து, அணை கடும் வறட்சியை எதிர்கொண்டது. மேட்டூரில் போதுமான தண்ணீர் இல்லாததால், டெல்டா மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இந்த பிரச்னை பீக்கில் இருந்த நிலையில்தான் வடகிழக்கு பருவமழை எட்டி பார்த்தது. கூடவே மிக்ஜாம் புயலையும் இழுத்துக்கொண்டு வந்தது.
புயல் மழையால் வட மாவட்டங்களின் நீர் நிலைகள் வேகமாக நிரம்பின. மழை ஒரு கட்டத்தில் தீவிரமடைந்ததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடும் நெருக்கடியை சந்தித்தன. வட தமிழகம் இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வந்த நிலையில், தென் தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கியது. ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை முழுவதும் ஒரே நாளில் பெய்ததால் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் வெள்ளத்தால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் சில பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. மற்ற மூன்று மாவட்டங்களிலும் வெள்ளம் முழுமையாக வடிந்திருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், அதாவது இரவு 10 மணி வரை 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மிதமான மழை பெய்யும். எனவே இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications