Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஆரஞ்சு அலர்ட்”.. அதிரடி காட்டப்போகும் மிக கனமழை! 4 மாவட்டங்களுக்கு பறந்த வார்னிங் - அப்போ சென்னை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரளப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக் கூடும்.

Meteorological Department issued orange alert that 4 districts receive very heavy rain today

இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

23.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

24.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

25.11.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26.11.2023 முதல் 28.11.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
PWD (திருப்பூர்) 17, அவினாசி (திருப்பூர்), ஆண்டிப்பட்டி (மதுரை) தலா 14, பரங்கிப்பேட்டை (கடலூர்) 13, வாட்ராப் (விருதுநகர்) 12, அழகரைஎஸ்டேட் (நீலகிரி), கொத்தவாச்சேரி (கடலூர்) தலா 11, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) 10, காரைக்கால் 9, நாகப்பட்டினம், குன்னூர் PTO (நீலகிரி) தலா 8,மண்டலம் 4 தொண்டையார்பேட்டை (சென்னை), மண்டலம் 1 கத்திவாக்கம் (சென்னை), பெரியகுளம் (தேனி), ராயபுரம் (சென்னை), தென்பரநாடு (திருச்சி), ஊத்துக்குளி (திருப்பூர்), ஏழுமலை (மதுரை), பெருந்துறை (ஈரோடு), குறிஞ்சிப்பாடி (கடலூர்) தலா 7,மண்டலம் 6 டிவிகேநகர் (சென்னை), சத்தியமங்கலம் (ஈரோடு), ஆதார்எஸ்டேட் (நீலகிரி), சிவகிரி (தென்காசி), திருப்பூர் (திருப்பூர்), குன்னூர் (நீலகிரி), வால்பாறைபி.டி.ஓ (கோயம்புத்தூர்), சென்னை மண்டலம் 3 மாதவரம் (சென்னை), தொண்டையார்பேட்டை (சென்னை), மண்டலம் 8 மலர்காலனி (சென்னை), ராயபுரம் (சென்னை), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), அம்பத்தூர் (திருவள்ளூர்), எண்ணூர் ஏடபிள்யூஎஸ் (திருவள்ளூர்), போடிநாயக்கனூர் (தேனி), வடக்குத்து (கடலூர்), பர்லியார் (நீலகிரி), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), டிஜிபிஅலுவலகம் (சென்னை), விருதாச்சலம் (கடலூர்), பிலவாக்கல் (விருதுநகர்), சோழவந்தான் (மதுரை), சோத்துப்பாறை (தேனி), சிறுவாணிஅடிவாரம் (கோவை), மஞ்சளார் (தேனி), பொன்னேரி (திருவள்ளூர்), குப்பநத்தம் (கடலூர்), பெரியபட்டி (மதுரை), கவுந்தப்பாடி (ஈரோடு), வாடிப்பட்டி (மதுரை), பெரம்பூர் (சென்னை) தலா 5,விருத்தாசலம் KVK AWS (கடலூர்), மேட்டுப்பட்டி (மதுரை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), சென்னை கலெக்டர் அலுவலகம் (சென்னை), ஆர்எஸ்சிஎல் வல்லம் (விழுப்புரம்), கோத்தகிரி (நீலகிரி), கிண்ணக்கொரை (நீலகிரி), சோழிங்கநல்லூர் (சென்னை), சேத்தியாத்தோப்பு (கடலூர்), உதகமண்டலம் (நீலகிரி), சிடி மருத்துவமனை தொண்டையார்பேட்டை (சென்னை), பவானிசாகர் (ஈரோடு), பெரியகுளம் PTO (தேனி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) தலா 4,வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), ஒய்எம்சிஏ நந்தனம் ARG (சென்னை), அண்ணாநகர் (சென்னை), மண்டலம் 06 டி65 கொளத்தூர் (சென்னை), மண்டலம் 1 திருவொற்றியூர் (சென்னை), மண்டலம் 02 மணலி (சென்னை), தேனாம்பேட்டை (சென்னை), மண்டலம் 03 புழல் (சென்னை), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), மண்டலம் 13 அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), மண்டலம் 13 அடையாறு (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை), மண்டலம் 14 பெருங்குடி (சென்னை), சித்தார் (கன்னியாகுமரி), கெத்தை (நீலகிரி), கொடிவேரி (ஈரோடு), ராஜபாளையம் (விருதுநகர்), ஈரோடு, புவனகிரி (கடலூர்), அன்னூர் (கோயம்புத்தூர்), துறையூர் (திருச்சி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோவை), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), ஆர்எஸ்சிஎல்-2 நெமூர் (விழுப்புரம்), புதுச்சேரி, தரங்கம்பாடி (மயிலாடுதுறை), தொண்டமுத்தூர் (கோவை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), வீரபாண்டி (தேனி), நத்தம் (திண்டுக்கல்), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), தரமணி ARG (சென்னை), சின்கோனா (கோயம்புத்தூர்), எலந்தகுட்டைமேடு (கோவை), ஈரோடு), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 3,சிவகாசி (விருதுநகர்), கீழ்கோத்தகிரிஎஸ்டேட் (நீலகிரி), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), கடலூர் (கடலூர்), கெட்டி (நீலகிரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), பெலாந்துறை (கடலூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), சூலூர் (கோயம்புத்தூர்), மரக்காணம் (விழுப்புரம்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), செந்துறை (அரியலூர்), இரணியல் (கன்னியாகுமரி), வீரகனூர் (சேலம்), நம்பியூர் (ஈரோடு), எம்.ஜி.ஆர்நகர் (சென்னை), உத்தமபாளையம் (தேனி), திண்டிவனம் (விழுப்புரம்), கிளென்மார்கன் (நீலகிரி), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), தக்கலை (கன்னியாகுமரி), சென்னை விமானநிலையம் (சென்னை), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), ஆத்தூர் (சேலம்), பெரியார் (தேனி), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), சிதம்பரம் AWS (கடலூர்), தழுதலை (பெரம்பலூர்), போத்தனூர் ரயில்நிலையம் (கோவை), VIT சென்னை AWS ( சென்னை) தலா 2, ஆலந்தூர் (சென்னை), எஸ்சிஎஸ்மில் அரசூர் (விழுப்புரம்), பெரம்பலூர், பல்லடம் (திருப்பூர்), டிஎஸ்சிஎல்எறையூர் (கள்ளக்குறிச்சி), ரெட்ஹில்ஸ் (திருவள்ளூர்), அண்ணாமலைநகர் (கடலூர்), எமரலாடு (மாவட்டம்) நீலகிரி), சாம்ராஜ்எஸ்டேட் (நீலகிரி), குந்தாபாலம் (நீலகிரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), தேக்கடி (தேனி), செய்யூர் (மாவட்டம்செங்கல்பட்டு), குடியாத்தம் (வேலூர்), சீர்காளி (மயிலாடுதுறை), பார்வூட் (மாவட்டம்). நீலகிரி), மதுக்கரை தாலுகா அலுவலகம் (கோவை), சத்தியார் (மதுரை), சித்தம்பட்டி (மதுரை), அண்ணாபல்கலைக்கழகம் (சென்னை), அரண்மனைப்புதூர் (தேனி), கோடியக்கரை (நாகப்பட்டினம்), ஆம்பூர் (திருப்பத்தூர்), விருதுநகர், கோவை தெற்கு, வைகைஅணை (தேனி), ஆழியார் (கோவை), மீமாத்தூர் (கடலூர்), சங்கரன்கோவில் (தென்காசி), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), திருப்போரூர் (செங்கல்பட்டு), சிதம்பரம் (கடலூர்), சோழவரம் (திருவள்ளூர்), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), கோடநாடு (நீலகிரி), ஆர்எஸ்சிஎல்-2 சூரப்பட்டு (விழுப்புரம்), கொப்பம்பட்டி (திருச்சி), கொளப்பாக்கம் ARG (செங்கல்பட்டு), வேலூர், குன்றத்தூர் (காஞ்சிபுரம்), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), அடையாமடை (கன்னியாகுமரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), திருவள்ளூர், நடுவட்டம் (நீலகிரி), கூடலூர் (தேனி), பீளமேடு (கோவை), ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), வானூர் (விழுப்புரம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), கேசிஎஸ்மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), மேட்டுப்பாளையம் (கோவை), சண்முகநதி (தேனி) தலா 1." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+