சென்னைக்கு அருகில் குவிந்துள்ள அடர்த்தியான மேகங்கள்.. 3D வரைபடத்தில் விளக்கிய வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் உருவான புயல் சென்னைக்கு அருகே கரையை கடக்க இருக்கிறது. இந்நிலையில், புயலின் நிலவரம், மழை மேகங்களின் அடர்த்தி குறித்த விவரங்களை 3டி வரைபடத்தில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது.

புயல்: கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சியானது புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டிருந்தது. இதனை வானிலை ஆய்வு மையம் உன்னிப்பாக கண்காணித்து வந்தது. எதிர்பார்த்தபடி வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த மையமாகவும், காற்றழுத்த தாழ்வு மையமாகவும் உருவானது. ஆனால் இலங்கையிலேயே இது கரையை கடந்து விடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென இதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டு, வடதமிழகத்தை நோக்கி வந்தது.

cyclone fengal weather chennai rains

கனமழை: வரும் வழியில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் வலுவடைந்தது. ஆனால் புயலாக கரையை கடக்குமா? என்று கேள்வி எழுந்தது. ஏனெனில் புயல் உருவாக வேண்டும் எனில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காற்றின் வேகம் மணிக்கு 35 கி.மீக்கு அதிகமாக இருக்க வேண்டும். நேற்று முன்தினம் இதன் வேகம் குறைவாகவே இருந்தது. எனவே கனமழை மட்டுமே பெய்யும் எனவும் புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொஞ்ச நேரத்திலேயே எல்லாமும் மாறிவிட்டது.

சென்னைக்கு அலர்ட்: புயலாக உருவான பின்னர் புதுச்சேரிக்கும்-மாமல்லபுரத்துக்கும் இடையில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியிருந்தனர். இப்போது இந்த பாதையிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது புதுச்சேரிக்கு நெருக்கமாக இல்லாமல், மாமல்புரத்துக்கு நெருக்கமாக கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு மிக அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

3டி வரைபடம்: இப்படி இருக்கையில் புயல் எங்கு மையம் கொண்டிருக்கிறது? எங்கிருந்து எப்படி கரையை கடக்க இருக்கிறது, மழையின் தீவிரம் எப்படி இருக்கும், மேகத்தின் அடர்த்தி எப்படி இருக்கும் என்பது குறித்த விவரங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. இது குறித்த 3டி மேப் கொண்ட வீடியோவையும் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+