வெயில்ல காய்ந்தது போதும்.. இனி குளுகுளுன்னு இருக்கப் போகுது தமிழகம்! ஜில் ஜில் ஆக்கப் போகும் மழை!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது வேலூர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து வருவது நல்ல அறிகுறி எனவும், இன்னும் வரும் நாட்களில் இடியுடன் கூடிய கனமழை உள் தமிழகத்தில் பெய்யும் என கணித்திருக்கின்றனர் தனியார் வானிலை ஆய்வாளர்கள்.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் வெப்ப அலை தமிழகத்தில் மிக அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.

அதிகாலை நேரங்களிலேயே வீட்டில் தங்கி இருக்கும் மக்கள் புழுக்கத்தை உணர முடிகிறது. மேலும் காலை 7 மணியிலிருந்து வெப்பத்தின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கி விட்டது. இதனால் முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் வெப்ப அலை: தமிழகத்தில் வெப்ப அலை வீசி வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை நூறு டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் தமிழகத்தின் 18 இடங்களில் நேற்று வெயில் சதம் அடித்தது. இன்றும் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீசும் எனவும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கூடுதல் வெப்பநிலை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையமானது எச்சரித்து இருக்கிறது.
கனமழை: அதுமட்டுமல்லாமல் 4, 5, 6 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீச கூடும் எனவும் இன்று முதல் ஆறாம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் கொளுத்தி வரும் நிலையில் மக்கள் வெளியே வர தயங்குகின்றனர். இந்நிலையில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதேபோல தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் உள்ளிட்டோரும், தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் மழை பெய்யும் அது இடியுடன் கூடிய கனமழையாக இருக்கும் எனக் கூறியிருந்தனர்.
இன்று முதல் மழை: அதை மெய்ப்பிக்கும் விதமாக நேற்று வேலூர் - சித்தூர் பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக பல்வேறு காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பெரிய பெரிய ஆலங்கட்டிகளுடன் மழை பெய்தது பொதுமக்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. இது மட்டுமில்லாமல் தென்மேற்கு பகுதிகளில் அதாவது கன்னியாகுமரி தொடங்கி தென்காசி தேனி பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருவது பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டை பொறுத்தவரை இன்று முதல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
மழையை எதிர்பார்க்கலாம்: ஏற்கனவே கணித்தபடி தமிழகத்தில் கனமழை பெய்யும் என தனியார் வானிலை மைய ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் உறுதி செய்து இருக்கிறார். அதாவது வேலூர் பகுதிகளில் இடியுடன் பெய்த கனமழை சாம்பிள் தான் எனவும் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் இனி அதிகமான கனமழை இருக்கும் எனவும் அது இடியுடன் கூடிய கனமழையாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தற்போது வெப்பம் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய தென் தீபகற்பம் அதிக வெப்பம் அடைந்திருப்பதாகவும் இதன் காரணமாக ராஜஸ்தான் பகுதிகளில் ஏற்படும் தாழ்வு நிலையால் பருவக்காற்று வீசி நிச்சயம் பெரிய அளவில் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இன்று முதல் ஆறாம் தேதிக்குள் தமிழகத்தில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் தனியார் வானிலை ஆய்வாளர்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications