தலைநகரை புரட்டி எடுத்த மிக்ஜாம் புயல்.. நாளை காலை 9 மணி வரை.. சென்னை விமான நிலையம் மூடல்
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதற்கிடையே கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை காலை 9 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை குறைவு தான் என்று பேசப்பட்டது. ஆனால் கடந்த மாதம் இறுதியில் பருவமழை சூடுபிடித்தது. அதுவரை வழக்கத்திற்கு குறைவான சதவீத மழையே தமிழகத்தில் பெய்து இருந்ததாக வானிலை மையம் கூறியிருந்தது. ஆனால் கடந்த மாத இறுதியில் இருந்து படிப்படியாக மழை அதிகரித்தது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் மழையின் சராசரி சதவீதம் அதிகரிக்க தொடங்கியது.

டிசம்பர் மாத தொடக்கத்தில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியபடியே கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயலால் இன்று சென்னை மக்களே மழை வேண்டாம்.. வேண்டாம்.. என்று சொல்கிற அளவுக்கு தலைநகர் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. நேற்று இரவில் இருந்து பெய்ய தொடங்கிய மழை தற்போது வரைக்கும் தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. மக்கள் எங்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சாப்பாடு வாங்குவதற்கோ, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட வெளியில் செல்ல முடியாத அளவிற்கு வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கை அடியோடு முடங்கியது.
இதேபோல் பஸ் சேவை, ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டதோடு விமான சேவையும் முடங்கியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விமான சேவையை தொடர முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில், நாளை காலை (செவ்வாய்க்கிழமை) 9 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவையில் இருந்து சென்னை செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications