பேய்மழையால் பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் திருசெந்தூர்.. ஸ்ரீவைகுண்டத்தில் ஒரே நாளில் 48 செமீ பதிவு
தூத்துக்குடி: சென்னையில் பெய்த மழையை விட தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் அதிக கனமழை பதிவாகியுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் ஒரே நாளில் 48 செமீ மழை பதிவாகியுள்ளது. திருச்செந்தூரில் 39 செமீ மழை பதிவாகியுள்ளது. கோவிலுக்குள் பெரு வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழையும் ஓரிரு இடங்களில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஆண்டுகளில் இல்லாத பெருமழை கொட்டித்தீர்த்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் ஒரே நாளில் 48 செமீ மழை பதிவாகியுள்ளது. திருச்செந்தூரில் ஒரே நாளில் 39 செமீ மழையும், சாத்தான்குளத்தில் 33 செமீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் பெருக்கெடுத்துள்ள வெள்ளத்தால் எங்கும் புகை மூட்டமாக காணப்படுகிறது. மக்கள் அருவிக்கரை பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் குற்றாலத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் " தென்காசியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டேன்.
தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சர் ஆணைக்கிணங்க மழை வெள்ள மீட்புப் பணிகள் மேற்கொள்வதற்காக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, 250 பேரிடர் மீட்பு பணி அலுவலர்கள் மூன்று மாவட்டங்களுக்கு பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications