Murasu: தமிழகத்தை மிரட்ட போகும் முரசு புயல்! பெயர் வைத்தது யார் தெரியுமா? என்ன செய்தி சொல்ல போகிறதோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் அதற்கு முரசு என பெயர் சூட்டப்படும். இந்த பெயரை இந்தியா பரிந்துரைத்தது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது புயலாக வலுப்பெறும் என்றும், இதனால் தமிழகத்திற்கு பாதிப்பு குறைவு என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

weather cyclone murasu

இந்த நிலையில் இவ்வாறு புயலாக மாறினால் அதற்கு முரசு புயல் என பெயரிடப்படும். இந்த பெயரை இந்தியா பரிந்துரைத்தது. வங்கக் கடல், அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயர் சூட்டும் குழுவிடம் இந்தியா பரிந்துரைத்துள்ளது.

முரசு என்றால் என்ன?

முரசு என்றால் தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவியாகும். பண்டை காலத்தில் போர் அறிவிப்பு, செய்தி அறிவிப்பு, முக்கியச் செய்திகளை மக்களுக்கு பறைசாற்ற முரசு பயன்படுத்தப்பட்டது. எனவே புயலுக்கு முரசு என்ற பெயர் சூட்டப்படுவதால் இது இந்தியாவுக்கு என்ன செய்தியை சொல்ல போகிறது, முரசு சப்தம் அதிகமாக கேட்பதை போல் மழையும் அதிகமாக இருக்கும எனபதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

புயல்களுக்கு பெயரிடப்படும் பழக்கம் 2004 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. ஒரே நேரத்தில் 2 புயல்கள் உருவாகி வெவ்வேறு திசையில் நகரும். அப்போது அந்த புயல்களை மக்களுக்கு அடையாளம் காட்டவே இந்த பெயரிடும் பழக்கம் உருவானது.

உலக அளவில் புயல்கள் குறித்த அறிவுரைகளை வழங்குவது , அவற்றுக்கு பெயர் சூட்டுவது போன்ற அதிகாரம் 6 வானிலை மையங்களுக்கும், 5 புயல் எச்சரிக்கை மையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அந்த 6 வானிலை மையங்களில் இந்தியாவும் ஒன்று!

13 நாடுகள்

வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய 13 நாடுகளுக்கு வானிலை முன்னெச்சரிக்கை அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எந்த மாதிரியான பெயர்கள்?

இந்தியா, வங்கக் கடல், அரபிக் கடல், இந்திய பெருங்கடல் ஆகிய பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டும் அதிகாரம் பெற்றுள்ளது. புயல்களுக்கு பெயர் சூட்டும் போது அதில் எந்த அரசியலும் இருக்கக் கூடாது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இருத்தல் வேண்டும். மத நம்பிக்கை, ஜாதி, மதம், கலாச்சாரம், இனத்தை புண்படுத்துவது போன்று இருக்கவே கூடாது.

புயலுக்கு பெயர் எப்படி இருத்தல் வேண்டும்?

சிறியதாகவும் உச்சரிக்க எளிதாகவும் இருக்க வேண்டும். புயலின் பெயர் அதிகபட்சம் 8 எழுத்துகளுக்குள் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு நாடுகளும் தலா 13 பெயர்களை பரிந்துரைக்க முடியும். 13 நாடுகள், தலா 13 பெயர்கள் என்றால் மொத்தம் 169 பெயர்கள் இருக்கும்.

தென்மேற்கு வங்கக் கடல்

இந்த நிலையில் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகள், அதையொட்டிய தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு குறைந்த காற்றழத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது போல், நாளை தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய கிழக்கு மத்திய வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மேலும் தாய்லாந்து, மியான்மர் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சி இன்று காலை நிலவரப்படி அதே பகுதியில் நீடிக்கிறது.

அடுத்த புயல்களுக்கு என்ன பெயர்?

இது இன்று வடக்கு அந்தமான் கடற்பகுதிக்கு நகர்ந்து வரக் கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகரக் கூடும். இதனால் 23 ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும். அவ்வாறு வலுவடைந்தால் அது புயலாக மாறும். அதற்கு முரசு என்ற பெயரிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து உருவாகும் புயல்களுக்கு ஈரான் நாடு பரிந்துரைத்த அக்வான், மாலத்தீவு பரிந்துரைத்த கானி உள்ளிட்ட பெயர்கள் பட்டியலில் உள்ளன. நாடுகளின் அகரவரிசைபடி பெயர்கள் எடுத்து சூட்டப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+