குன்றத்தூரில் நள்ளிரவில் உடைந்த ஏரி! 10 அடி உயர ஏரியிலிருந்து 6 அடி தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூரில் உள்ள நடுவீரப்பட்டு ஏரி உடைந்து குடியிருப்புகளுக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தை அடுத்துள்ளது நடுவீரப்பட்டு ஏரி. மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்பி விட்டன.

இந்த நிலையில் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் திடீரென ஏரியின் கரை உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியது. பஜனை கோயில் தெரு, நாகாத்தம்மன் கோயில் தெருக்களில் அதிக அளவு தண்ணீர் சூழ்ந்ததால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த ஏரி ஆக்கிரமிப்பு நபர்களால் உடைக்கப்பட்டதா அல்லது தானாக உடைந்ததா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த ஏரி உடைப்பால் விளை நிலங்களுக்குள் நீர் புகுந்துவிட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மிக்ஜாம் புயலால் பெய்த அடை மழையால் சூழ்ந்த நீர் தற்போது மெல்ல வெளியாகி வரும் நிலையில் இந்த ஏரி உடைப்பு சம்பவம் மக்களை பெரிதும் பாதித்துள்ளது. கடந்த வாரம் கூட புழல் ஏரியின் கரை பலவீனமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அப்படி எல்லாம் இல்லை, கரைகள் நன்றாக வலுவாக இருக்கிறது என அரசு தெரிவித்தது.
அது போல் ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் நிலையில் அதை திறந்துவிட்டால் பாதிப்புகள் குறைவாக இருக்கும். உடைந்துவிட்டால் ஊருக்குள் தண்ணீர் வந்து பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். மிக்ஜாம் புயலின் போது செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டது. அது திறக்கப்படாமல் உடைந்து இருந்தால் பாதிப்புகள் அதிகமாக இருந்திருக்கும்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications