பெருமழையேதான்.. 100ஐ தாண்டிய அளவு! நாகை, காரைக்கால், புதுவை, கடலூரில் கொட்டித்தீர்த்துருச்சே
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 167 மிமீ என்ற அளவில் மிக கனமழை கொட்டித் தீர்த்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் நேற்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பொழிந்த
மழை அளவு குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில்,
"வானிலை கண்காணிப்பகங்கள்:
நாகப்பட்டினம் - 167.0 மிமீ
காரைக்கால் - 122.0 மிமீ
புதுச்சேரி - 96.0 மிமீ
கடலூர் - 93.0 மிமீ
மீனம்பாக்கம் (சென்னை) - 43.7 மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) - 40.3 மிமீ
வால்பாறை (கோயம்புத்தூர்) - 11.4 மிமீ
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) - 7.0 மிமீ
திருச்சிராப்பள்ளி - 5.0 மிமீ
பரங்கிப்பேட்டை (கடலூர்) - 1.6 மிமீ
பாளையம்கோட்டை (திருநெல்வேலி) - 1.6 மிமீ
அரியலூர் - 1.0 மிமீ
கூனூர் (நீலகிரி) - 0.7 மிமீ
கொடைக்கானல் (திண்டுக்கல்) - சுவடு
ஏற்காடு (சேலம்) - ட்ரேஸ்
வேலூர் - சுவடு
பாம்பன் (ராமநாதபுரம்) - தடயம்
கோயம்புத்தூர் (கோயம்புத்தூர்) தடயம்
தானியங்கி வானிலை நிலையங்கள்:
எண்ணூர் துறைமுகம் (சென்னை) - 92.0 மிமீ
விஐடி சென்னை (செங்கல்பட்டு) - 53.5 மிமீ
மீனம்பாக்கம் இஸ்ரோ (சென்னை) - 45.0 மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) - 34.5 மிமீ
அதிராமபட்டினம் (தஞ்சாவூர்) - 6.5 மிமீ
திருச்செந்தூர் (தூத்துக்குடி) - 0.5 மிமீ
வேளாண் வானிலை கண்காணிப்பகம்:
புதுச்சேரி கேவிகே (புதுச்சேரி) - 90.5 மிமீ
விருத்தாசலம் கேவிகே (கடலூர்) - 50.5 மிமீ
திரூர் (திருவள்ளூர்) - 39.5 மிமீ
வம்பன் கேவிகே (புதுக்கோட்டை) - 12.5 மிமீ
கட்டப்பாக்கம் கேவிகே (காஞ்சிபுரம்) - 5.0 மிமீ
விரிஞ்சிபுரம் கேவிகே (வேலூர்) - 2.5 மிமீ
தானியங்கி மழை அளவீடு நிலையங்கள்:
சத்யபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) - 70.5 மிமீ
தரமணி (சென்னை) - 47.0 மிமீ
எல்மோயிஸ் கோலப்பாக்கம் (காஞ்சிபுரம்) - 46.5 மிமீ
ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை) - 42.0 மிமீ
நியாட் பள்ளிக்கரணை (சென்னை) - 41.3 மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) - 37.5 மிமீ
புழல் (திருவள்ளூர்) 28.0 மிமீ
ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்) - 25.5 மிமீ
குட் வில் பள்ளி வில்லிவாக்கம் (திருவள்ளூர்) - 19.5 மிமீ (இரவு 11.30 வரை)
சத்தான்குளம் (தூத்துக்குடி) - 4.0 மிமீ
இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) - 0.5 மிமீ" என்று குறிப்பிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications