உருவாகிறது.. அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. இரவெல்லாம் ஒரே மழை.. பனியில் மூடிய சென்னை
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டியது.. சென்னையின் பிரதான சாலைகளில், விடிகாலை நேரத்தில் கடும் குளிர் காரணமாக வாகன ஓட்டிகள் பெருத்த அவதிக்கு ஆளானார்கள்.
தென்கிழக்கு அரபிக்கடல், அதனையொட்டிய மாலத்தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கனமழை: தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக, நெல்லை உட்பட 5 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதேபோல, பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 5 மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சிபிஎஸ்சி என அனைத்தும் இன்று இயங்காது. திங்களன்று அரையாண்டு தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையை பொறுத்தவரை, அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது... இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். இதன்காரணமாக, புறநகரில் காலை முதலே வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
கோவை: இந்த நிலையில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளான காரமடை, தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதலே இன்று காலை வரை விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. காரமடை சாஸ்திரி நகர் பகுதியில் தரைமட்ட பாலத்தை மூழ்கடித்துள்ளது.
நீலகிரி: அதேபோல, கிழக்கு திசைக்காற்று மாறுபாடு காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் நீலகிரியின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதலே மழை பெய்து வருகிறது.. மேலும், காலை முதல் கடும் பனிமூட்டத்துடன் மிதமான மழைபெய்து வந்தததால் குளிர் அதிகரித்து காணப்பட்டது . வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை என 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.
-
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications