Low Pressure Area: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. பருவமழை மீண்டும் தீவிரமடையும்.. வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக் கடலில் மேற்கு வங்கம் - ஒடிசா கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் பருவமழை மேலும் தீவிரமடியும் என வானிலை மையம் கூறியுள்ளது.

வானிலையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தையடுத்து இன்று முதல் 18 ஆம் தேதி வரை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாப் பகுதிகளுக்கும், மேற்கு வங்கம், வங்கதேசம், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Low Pressure Area

தென்மேற்கு பருவமழை தீவிரம்

மீனவர்கள் மற்றும் கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் உள்ளூர் நிர்வாகம் அளிக்கும் அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்றவும் விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் வட கடலோர பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்கள் சற்று கவனமுடன் இருக்கவும் வலியுறுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ஒடிசாவில் வெளுத்து வாங்கி வரும் மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால், மழை மீண்டும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

புதிய காற்றழுத்த பகுதி

முன்னதாக சத்தீஷ்கரில் இன்று மிக மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது.. ஜம்மு காஷ்மீர், லடாக், கிழக்கு உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், இமாசலபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட், மத்திய மகாராஷ்டிரா, மேற்கு மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை இன்றும் நாளையும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இன்று முதல் 3 நாட்களுக்கு மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக் கடலில் மேற்கு வங்கம் - ஒடிசா கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

60 கிமீ வேகத்தில் காற்று வீசும்

இதனால் தென் மேற்கு பருவமழை மேலும் தீவிரமடியும் என வானிலை மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடைய அதிக வாய்ப்புள்ளது என கணித்துள்ள வானிலை மையம், இன்று முதல் வரும் 18 ஆம் தேதி வரை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதிகள், மேற்கு வங்கம், வங்கதேசம், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகள் அதனை ஒட்டிய கடல் பகுதி ஆகிய இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் பலத்த காற்றும் வீச வாய்ப்பு உள்ளது என்று எச்சாரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+