வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக மாற சான்ஸ் இருக்கா?
சென்னை: வங்கக் கடலில் நாளை புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் கூறியுள்ளது. வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
இது தமிழகம் நோக்கி நகரக்கூடும் என்றும், புயலாக மாறுமா என்பதை பினவரும் நாளில் தான் சொல்ல முடியும் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

காற்றழுத்த தாழ்வு பகுதிகள்
நேற்று (22-10-2025) தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (23-10-2025) காலை 05.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்து வட தமிழக உட் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவியது.
இது இன்று காலை 08.30 மணி அளவில் தெற்கு உள் கர்நாடகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
நேற்று (22-10-2025) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (23-10-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வட மேற்கு திசையில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்
நேற்று (22-10-2025) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று (23-10-2025) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக 24-10-2025 அன்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் என்று கூறியுள்ளது.
புயலாக மாறுமா?
ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமோ என பலரும் எதிர்பார்த்த நிலையில் அது வலுவிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் தமிழகம் நோக்கி நகரக்கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இது புயலாக மாறுமா என்பதை இப்போதே சொல்லிவிட முடியாது என்றும் வரும் நாட்களில் தான் தெரியும் என்றும் தெரிவித்தனர்.
மழை அளவு (செமீ)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழைப்பொழிவு விவரங்களை பார்க்கலாம்.
* அரக்கோணம் (ராணிப்பேட்டை) 13.
* அரூர் (தர்மபுரி) 11.
* மோகனூர் (நாமக்கல்), நாமக்கல் (நாமக்கல்), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி). வெள்ளக்கோயில் (திருப்பூர்) தலா
* திருத்தணி (திருவள்ளூர்), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), கிளன்மார்கன் (நீலகிரி) தலா 8,
* DSCL தியாகதுர்க்கம் (கள்ளக்குறிச்சி), ராணிப்பேட்டை AWS (ராணிப்பேட்டை), RSCL-2 குரப்பட்டு (விழுப்புரம்), RSCL-2 கெடார் (விழுப்புரம்), துவாக்குடி AWS (திருச்சிராப்பள்ளி). நடுவட்டம் (நீலகிரி), மேட்டூர் (சேலம்), திருவாலங்காடு (திருவள்ளூர்), ஊத்து (திருநெல்வேலி), துவாக்குடி IMTI (திருச்சிராப்பள்ளி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) தலா 7
* கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), சேந்தமங்கலம் (நாமக்கல்), கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), RSCL-3 வளத்தி (விழுப்புரம்). பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), கல்லணை ARG (தஞ்சாவூர்), கொடுமுடி (ஈரோடு), தேவாலா
* (நீலகிரி), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), தர்மபுரி PTO (தர்மபுரி) தலா 6,
* பூண்டி (திருவள்ளூர்), கல்லணை (தஞ்சாவூர்), பார்வூட் (நீலகிரி), நாலுமுக்கு (திருநெல்வேலி). புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), செஞ்சி (விழுப்புரம்), பொன்மலை (திருச்சிராப்பள்ளி). விழுப்புரம் (விழுப்புரம்), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), சத்தியமங்கலம் (ஈரோடு), RSCL வல்லம் (விழுப்புரம்), மொடக்குறிச்சி (ஈரோடு), வந்தவாசி (திருவண்ணாமலை), காக்காச்சி (திருநெல்வேலி), சந்தியூர் KVK AWS (சேலம்), KCS யில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), திருச்சிராப்பள்ளி நகரம் (திருச்சிராப்பள்ளி) தலா 5 செமீ மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications