வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. டிச.16 டூ 19 வரை மீண்டும் கனமழை - வானிலை மையம்
சென்னை: வங்கக்கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதோடு, தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் வரும் 16ம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பெஞ்சல் புயல் காரணமாக ஒரு வாரத்துக்கு முன்பு சென்னை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்கள் மற்றும் வடக்கு மாவட்டங்களில் அதிக கனமழை கொட்டியது. குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின.

அதன்பிறகு சில நாட்கள் மழை இல்லாத நிலை இருந்தது. இதற்கிடையே தான் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது கடந்த 10ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இதனால் டிசம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் சென்னையில் கனமழை பெய்தது. அதன்பிறகு நேற்று முதல் இன்று வரை தென்தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தான் காரணம். இந்நிலையில் தான் இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது.
இதனால் மழை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தான் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று சென்னை வானிலை ஆய்வும் மையம் கூறியுள்ளதாவது: தெற்கு அந்தமான் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் அதாவது டிசம்பர் 14ம் தேதியில் வளிமண்டல மேலடுக்கு காற்றழுத்த சுழற்சி என்பது உருவாக உள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரையை நோக்கி வரக்கூடும்.. இதனால் தமிழகத்தில் வரும் 16ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழையும், 17 ம் தேதி தமிழகத்தில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும்’’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ள நிலையில் அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications