ஒரு புயல் போனதும்.. அடுத்த ஆபத்து வருதே! அரபிக்கடலில் இன்று உருவாகும் தாழ்வுப்பகுதி! வானிலை வார்னிங்
சென்னை; இன்று அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது இன்று பிற்பகல் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகிறது.

தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் திருப்பூர்,திண்டுக்கல், தேனி, விருதுநகர் மதுரை, நென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது
வானிலை மைய அறிவிப்பு; இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
08.12.2023: தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் திருப்பூர்,திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, நென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சரி இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
09.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, கங்கை, மதுரை, புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாளர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிய இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
10.12.2023 மற்றும் 11.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12.12.2023 முதல் 14.12.2023 வரை; தமிழகத்தில் ஓரி இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் வருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் வசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) தலா 9, கீம்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), ராஜபாளையம் (விருதுநகர்). சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்) தலா 7,போடிநாயக்கனூர் (தேனி), லால்பேட்டை (கூடார்), பர்லியார் (நீலகிரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), ஆடுதுறை (மயிலாடுதுறை தலா . வால்பாறை PTO (கோயம்புத்தூர்). நாவலூர் கோட்டப்பட்டு (இருச்சிராப்பள்ளி), களர்). ஆழியார் (கோயம்புத்தூர்) தலா 5. அன்னூர் (கோயம்புத்தூர்), புவனகிரி (கடலூர்) தலா 4. எண்ணூர் PTO (நீலகிரி) 3, மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 3. சிதம்பரம் (கடலூர்) 3. அமராவதி அணை (திருப்பூர்} 3 காங்கேயம் (திருப்பூர்) 3 சேத்தியாத்தோப்பு (கடலூர்) 3.\ சின்கோனா (கோயம்புத்தூர்) 3. பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 3, வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்)3 மடத்துக்களம் (இலப்பூர்) 3. கொடைக்கானல் (திண்டுக்கல்) 3. திமைர்த்தி அணை (இயப்பூர்) தலா 3, கே.எம்.கோயில் (கடலூர்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), திலவர்த்தி 18 (திருப்பூர்), மண்டலம் 02 மணலி (சென்னை), தேக்கடி (தேனி), என்னூர் (நீலகிரி), பாலமோர் மழை பெய்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications