நவ. 26ல் அந்தமானில் உருவாகும் புதிய காற்றழுத்தம்.. அப்படியே நகர்ந்து வந்தால் என்னவாகும்? ஆஹா சூப்பர்!
சென்னை: அந்தமான் கடல் பகுதியில் வரும் 26ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் அந்த மாதத்தில் மழையின் அளவு இயல்பை காட்டிலும் குறைவாக இருந்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று முன் தினம் பரவலாக மழை பதிவாகியுள்ளது. சென்னையில் கடந்த இரு தினங்களாக மழை தொடர்ந்து பெய்தது. நேற்று மாலைக்கு மேல் சென்னையின் ஒரு சில இடங்களில் மழை நின்றது. பிற்பகலில் சற்று வெயிலும் வந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 5 இடங்களில் மிக கனமழையும் 15 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 17 செ.மீ. மழை பதிவாகியிருந்தது. இதையடுத்து தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அது போல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் நாளை 24 ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் நாளை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.
இதை அடுத்து வரும் 26 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்றும் வரும் 26ஆம் தேதிக்குள் மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் இந்த காற்றழுத்தம் வலுவிழந்த நிலையில் நகர்ந்து வந்தால் தமிழகத்திற்கு நல்ல மழை இருக்கும். அதிலும் சென்னையில் அதிக மழை பொழிவை பார்க்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications