நைட்டு ஃபுல்லா மழை வெளுக்க போகுது.. 22 மாவட்டங்களுக்கு இரவோடு இரவாக பறந்த எச்சரிக்கை.. சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு நள்ளிரவு 1 மணி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இதேபோன்று இன்று நள்ளிரவு 1 மணி வரைக்கும், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்பட 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இன்றும், நாளையும் சென்னை உள்பட வடக்கு மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கும், ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

8 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை
இதனால் பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, விழுப்புரம், திருவாரூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடிய விடிய மழை வெளுக்க போகுது
இந்த நிலையில் நள்ளிரவிலும் கனமழை விடாமல் கொட்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டும்.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
17 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
இதேபோன்று அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி ஆகிய 17 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு இருக்கிறது என கூறியுள்ளது. முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:--
நாளை எங்கெல்லாம் "ரெட் அலர்ட்"
22-10-2025: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்ளில், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், திருச்சிராப்பள்ளி, வேலூர், திருப்பத்தூர். தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு (சென்டிமீட்டரில்):
* தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) 17.
* பாம்பன் (ராமநாதபுரம்) 15.
* மண்டபம் (ராமநாதபுரம்) 14,
* வரட்டுப்பள்ளம் (ஈரோடு) 13.
* வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), அண்ணாமலை நகர் (கடலூர்), சிதம்பரம் AWS (கடலூர்), சிதம்பரம் (கடலூர்) தலா 10,
* ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), காரைக்கால் (காரைக்கால்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) தலா 9.
* தலைஞாயிறு (நாகப்பட்டினம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), சோழிங்கநல்லூர் (சென்னை). வெட்டிக்காடு (தஞ்சாவூர்), சீர்காழி (மயிலாடுதுறை) தலா 8,
* காரைக்கால் AWS (காரைக்கால்), திருவாரூர் (திருவாரூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்).
* மயிலாடுதுறை (மயிலாடுதுறை), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா 7.
* கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்). ஒரத்தநாடு (தஞ்சாவூர்), எண்ணூர் AWS (திருவள்ளூர்). செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை, கொடவாசல் (திருவாரூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) தலா 6 செமீ மழை பெய்துள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications