சென்னையில் பிசுபிசுக்கும் மழை! பள்ளிகளுக்கு விடுமுறையா! அண்டை மாவட்டங்களில் என்ன நிலை?
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகள் இயங்கும் என ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு மழை பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை தற்போது அக்டோபர் 20-ம் தேதிக்கு மேல் தொடங்கியது. இது தொடங்கியதும் வங்கக் கடலில் உருவான ஒரு காற்றழுத்தம் மிதிலி புயலாக மாறி ஒடிஸா அருகே கரையை கடந்தது.

தற்போது வரை எந்த காற்றழுத்தமும் உருவாகவில்லை. இந்த மாத கடைசியில் ஒரு காற்றழுத்தம் உருவாகக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று பிற்பகல் முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழலே நிலவி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று முன் தினம் மாலை முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆங்காங்கே சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில்தான் நேற்று 2ஆவது நாளாக விடிய விடிய சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்துள்ளது. சென்னையில் கிண்டி, தி.நகர், வேப்பேரி, கோயம்பேடு, அமைந்தகரை, மயிலாப்பூர், சிந்தாதிரிபேட்டை, சேப்பாக்கம், வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
சென்னையில் நேற்று முன் தினம் காலை 8.30 மணி முதல் காலை வரை 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது அதிகபட்சமாக எண்ணூரில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அது போல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்றும் சென்னையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவித்துள்ளனர். அது போல் புதுவை, காரைக்காலிலும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் ஏமாற்றமடைந்தனர். அதே வேளையில் நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், நீலகிரி, தேனி, புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேனியில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
இன்று (23-11-2023) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications