வந்தவுடனே அதிரடி.. வடகிழக்கு பருவமழை ஸ்டார்ட்! சீரியசாகும் காற்றழுத்த தாழ்வு - 2 மாவட்டங்களில் கனமழை
சென்னை: இன்று வட கிழக்கு பருவமழை காலம் தமிழ்நாட்டில் தொடங்கி உள்ள நிலையில், 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று 21 அக்டோபர் 2023 துவங்கி உள்ளது. நேற்று காலை (20-10-2023) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை (21-10-2023) 0830 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது 22-10-2023 வாக்கில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 'தேஜ்' புயலாக வலுப்பெற்று தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த மூன்று நான்கு தினங்களில் மிக தீவிர புயலாக வலுப்பெற்று ஏமன் மற்றும் ஓமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும்.
21.10.2023 மற்றும் 22.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
23.10.2023 மற்றும் 24.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25.10.2023 முதல் 27.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): கொட்டாரம் (கன்னியாகுமரி) 7, கன்னியாகுமரி, மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), ராதாபுரம் (திருநெல்வேலி) தலா 5, அணைகெடங்கு (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), குன்றத்தூர் (காஞ்சிபுரம்) தலா 4, குருந்தன்கோடு (கன்னியாகுமரி), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), மண்டலம் 11 மதுரவாயல் (சென்னை), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), மண்டலம் 12 முகலிவாக்கம் (சென்னை), சிவலோகம் (கன்னியாகுமரி), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), சிற்றாறு (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), மண்டலம் 06 திரு.வி.க நகர் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் AWS, சென்னை நுங்கம்பாக்கம், மண்டலம் 05 ராயபுரம் (சென்னை), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை) தலா 3, மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), செம்பரபாக்கம் (காஞ்சிபுரம்), மண்டலம் 01 ஆலந்தூர் (சென்னை), அடையாமடை (கன்னியாகுமரி), செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), இரணியல் (கன்னியாகுமரி) தலா 2, முக்கடல் அணை (கன்னியாகுமரி), நாங்குனேரி (திருநெல்வேலி), குளச்சல் (கன்னியாகுமரி), டிஜிபி அலுவலகம் (சென்னை), ராயபுரம் (சென்னை), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), எம்ஜிஆர் நகர் (சென்னை), மண்டலம் 02 மணலி (சென்னை), களக்காடு (திருநெல்வேலி), மண்டலம் 05 பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 02 மீனம்பாக்கம் (சென்னை), திற்பரப்பு (கன்னியாகுமரி), சென்னை விமானநிலையம் தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications