வெறும் 30 நிமிடத்தில் 50 மிமி மழை.. இங்கேயே இப்படின்னா.. ரெட் தக்காளி ஏரியாவில்? வெதர்மேன் ட்வீட்
சென்னை: சென்னையில் இன்று டமால் டுமீல் என்ற மழை இன்றைகு மிஸ்ஸே ஆகாது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருந்தார். அவர் கூறியபடியே இன்று மழை வெளுத்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் வெறும் 30 நிமிடத்தில் 50 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெயில் கொடுமையின் காரணமாக மக்கள் பரிதவித்து போனார்கள். சென்னை மற்ற ஊர்களை போல் காற்றடிக்கும் ஊரும் இல்லை.. வெயிலும், புழுக்கமும் எப்போதுமே கடுமையாக இருக்கும். டிசம்பர் மாதம் மட்டுமே வெயில் எல்லாம் குளிர் அடிக்கும் மற்ற மாதம் எல்லாமே சென்னைக்கு கோடை காலம் தான்.

சென்னையில் வானிலை கடுமையாக இருக்கக் காரணம், இங்கு சென்னையில் மரங்களே இல்லாதது, ஏரிகள் அழிந்தது போன்ற காரணங்களை கூறலாம். சென்னையில் மழை வந்தாலும் சாதாரணமாக இருக்காது. போட்டுபுரட்டி எடுத்துவிடும். விடாமல் மழை பெய்து, மொத்த நகரத்தையும் வெள்ளக்காடாக்கிவிடும். இதுதான் எதார்த்தம், அதேநேரம் நவம்பர், டிசம்பரில் மட்டும் தான் இதுபோன்ற காட்சிகள் இருக்கும்.
இந்நிலையில் தென்மேற்கு பருவ மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட ட்வீட் பதிவில், இன்று மிஸ்ஸே ஆகாது. டமால் டுமீல் என ஜூலைக்கான மழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு பகுதியில் பெய்யும். 38 டிகிரி அளவிற்கு இன்று வெப்பநிலை இருந்தது. நகரின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்யும் என்று கூறியிருந்தார்.

தமிழ்நாடு வெதர்மேன் போட்ட இன்னொரு பதிவில், கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரம் வரை உள்ள சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மழையின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இடிமின்னலுடன்மேகக்கூட்டங்கள் நகர்ந்து வருகிறது. கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலை பகுதிகளில் விரைவில் நல்ல மழை பெய்யும் என்று கூறினார்.
இந்நிலையில் சொன்னது போலேவே சென்னை முழுக்க நல்ல மழை பெய்தது. இதுபற்றி வெதர்மேன் போட்ட இன்னொரு பதிவில், சிவப்பு தக்காளி (மிகவும் உக்கிரமான மேகங்கள்) தென் சென்னை புறநகர் பகுதிகளில் காணப்படுகின்றன. ரோஹித் சர்மா உலக கோப்பை டி20 போட்டியில் அதிவேகமாக 50 ரன்கள் எடுத்த அளவிற்கு இன்று நுங்கம்பாக்கத்தில் சாதனை படைத்துள்ளது மழை. நுங்கம்பாக்கத்தில் வெறும் 30 நிமிடங்களுக்குள் 50 மிமீ மழை பெய்துள்ளது. இங்கேயே இப்படி என்றால், சிவப்பு தக்காளி உள்ள தென்சென்னையில் எப்படி இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications