மழை சாறெடுக்கப்போகுது.. சென்னை நோக்கி நகர்ந்த மேகக்கூட்டம்.. குறிப்பா இங்க.. எச்சரிக்கும் வெதர்மேன்!
சென்னை: ஒரு தீவிரமான மேகம் சென்னை நகரை நோக்கி நகர்ந்து வருவதால், கடலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தென் தமிழகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகியுள்ளது. அது மேலும் வலுவடையும் என்பதால் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் கடலோரப் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
அதே போல தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதாவது விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், அடுத்த 25 முதல் 30 நாட்களுக்கு வங்கக் கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் சென்னை முதல் நாகப்பட்டினம் வரையிலான கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் டிசம்பர் இரண்டாம் தேதி வரை மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு வெதர்மேன், அண்மையில் ஒரு தகவலை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு தீவிரமான மேகம் சென்னை நகரை நோக்கி நகர்ந்து வருகிறது, அடுத்த 1 மணி நேரத்தில் குறிப்பாக கடலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பருவமழையின் முதல் பெரிய மழை எண்ணிக்கை வட தமிழக கடலோர மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. தென் சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம் வரை பலத்த மழை பெய்தது. பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் முதலாவது 100 மி.மீ மழையை பதிவு செய்துள்ளது. இன்றும் நாளையும் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. சென்னையில் அடுத்த சில மணி நேரங்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும். குறிப்பாக தென் சென்னையில் கடலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications