ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மிக கனமழை.. 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! 3 நாள் சம்பவம் இருக்கு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்து இருக்கிறது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "வடதமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
10.01.2024: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
11.01.2024 முதல் 13.01.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான - கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 - 27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 - 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 - 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): சீர்காழி (மயிலாடுதுறை) 24, சிதம்பரம் (கடலூர்) 23, வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 22, திருவாரூர் (திருவாரூர்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) தலா 21, கொள்ளிடம் (மயிலாடுதுறை), புவனகிரி (கடலூர்) தலா 19, நன்னிலம் (திருவாரூர்) 17, சேத்தியாத்தோப்பு (கடலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்) தலா 15, திருப்பூண்டி (நாகப்பட்டினம்), கே.எம்.கோயில் (கடலூர்), காரைக்கால் (காரைக்கால்), கடலூர் (கடலூர்) தலா 14, கொடவாசல் (திருவாரூர்), மரக்காணம் (விழுப்புரம்), கொத்தவாச்சேரி (கடலூர்), புதுச்சேரி (புதுச்சேரி) தலா 13, லால்பேட்டை (கடலூர்), வானூர் (விழுப்புரம்), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) தலா 12, திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), வலங்கைமான் (திருவாரூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), கும்பகோணம் (தஞ்சாவூர்) தலா 11, பாண்டவரடி (திருவாரூர்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), பரங்கிப்பேட்டை (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), செய்யூர் (செங்கல்பட்டு), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) தலா 10, வடகுத்து (கடலூர்), திண்டிவனம் (விழுப்புரம்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), RSCL வல்லம் (விழுப்புரம்), நீடாமங்கலம் (திருவாரூர்), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), விழுப்புரம் (விழுப்புரம்), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்) தலா 9, RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), வனமாதேவி (கடலூர்), பொன்னேரி (திருவள்ளூர்), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), சுத்தமல்லி அணை (அரியலூர்) தலா 8, RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை), மன்னார்குடி (திருவாரூர்), திருக்குவளை (நாகப்பட்டினம்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), தரமணி ARG (சென்னை), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), மீனம்பாக்கம் AWS (சென்னை), SRC குடிதாங்கி (கடலூர்), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), கொளப்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), குப்பநத்தம் (கடலூர்), செஞ்சி (விழுப்புரம்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), சென்னை விமானநிலையம் (சென்னை), ஆலந்தூர் (சென்னை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), RSCL-2 கெடார் (விழுப்புரம்), மண்டலம் 12 D156 முகலிவாக்கம் (சென்னை) தலா 7, விருதாச்சலம் KVK AWS (கடலூர்), மீ மாத்தூர் (கடலூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), பண்ருட்டி (கடலூர்), மண்டலம் 13 U39 அடையார் (சென்னை), திருப்போரூர் (செங்கல்பட்டு), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), மண்டலம் 13 அடையார் (சென்னை), பெலாந்துறை (கடலூர்), ஆவடி (திருவள்ளூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) தலா 6, NIOT_பள்ளிக்கரணை ARG (சென்னை), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), அடையாறு (சென்னை), மண்டலம் 14 பெருங்குடி (சென்னை), திருமானூர் (அரியலூர்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), விருதாச்சலம் (கடலூர்), YMCA நந்தனம் ARG (சென்னை), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), ஆலந்தூர் (செங்கல்பட்டு), மண்டலம் 07 U18 D81 வானகரம் (சென்னை), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), செந்துறை (அரியலூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), KCS மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), திருவையாறு (தஞ்சாவூர்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), மண்டலம் 14 U41 பெருங்குடி (சென்னை), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), கோடம்பாக்கம் (சென்னை), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை) தலா 5, அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), கோடியக்கரை (மயிலாடுதுறை), அரக்கோணம் (ராணிப்பேட்டை), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), தாலுகா அலுவலகம் அரியலூர் (அரியலூர்), அரியலூர் PTO (அரியலூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), BASL முகையூர் (விழுப்புரம்), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), மண்டலம் 03 புழல் (சென்னை), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), மண்டலம் 06 திரு.வி.க.நகர் (சென்னை), திருவூர் AWS (திருவள்ளூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), மண்டலம் 11 U32 மதுரவாயல் (சென்னை), நாலுமுக்கு (திருநெல்வேலி), பெரம்பூர் (சென்னை), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), சென்னை (N) AWS (சென்னை), குருவாடி (அரியலூர்), வேப்பூர் (கடலூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை) தலா 4, வளசரவாக்கம் (சென்னை), ஊத்து (திருநெல்வேலி), அம்பத்தூர் (சென்னை), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), அம்பத்தூர் (சென்னை), RSCL அரசூர் (விழுப்புரம்), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), தண்டையார்பேட்டை (சென்னை), மண்டலம் 02 D15 மணலி (சென்னை), கீழச்செருவை (கடலூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), செங்குன்றம் (திருவள்ளூர்), லக்கூர் (கடலூர்), குருங்குளம் (தஞ்சாவூர்), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), வீரகனூர் (சேலம்), காட்டுமயிலூர் (கடலூர்), திருவொற்றியூர் (சென்னை), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), KCS மில்-2 மூரர்பாளையம் (கள்ளக்குறிச்சி), காக்காச்சி (திருநெல்வேலி), ACSமருத்துவக்கல்லூரி ARG (காஞ்சிபுரம்), மண்டலம் 02 மணலி (சென்னை), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), சோழவரம் (திருவள்ளூர்), புழல் ARG (திருவள்ளூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), கடனா அணை (தென்காசி), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), ராயபுரம் (சென்னை), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), மணலி (சென்னை), தொழுதூர் (கடலூர்), மண்டலம் 05 GCC (சென்னை), பூதலூர் (தஞ்சாவூர்), திரு.வி.க நகர் (சென்னை), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி) தலா 3, தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), சின்கோனா (கோயம்புத்தூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), பார்வூட் (நீலகிரி), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), வாலாஜா (ராணிப்பேட்டை), மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), திருவாலங்காடு (திருவள்ளூர்), SCS மில் திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), கல்லக்குடி (திருச்சிராப்பள்ளி), பூண்டி (திருவள்ளூர்), செய்யார் (திருவண்ணாமலை), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), பூண்டி (திருவள்ளூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), மாஞ்சோலை (திருநெல்வேலி), நந்தியாறு (திருச்சிராப்பள்ளி), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), அகரம் சீகூர் (பெரம்பலூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), மின்னல் (ராணிப்பேட்டை), திருத்தணி (திருவள்ளூர்), ஆரணி (திருவண்ணாமலை), வல்லம் (தஞ்சாவூர்), தலைவாசல் (சேலம்) தலா 2, அரூர் (தர்மபுரி), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), பெரம்பலூர் (பெரம்பலூர்), வி.களத்தூர் (பெரம்பலூர்), நடுவட்டம் (நீலகிரி), மதுக்கூர் (தஞ்சாவூர்), கரியகோவில் அணை (சேலம்), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), கல்லணை (தஞ்சாவூர்), தேனாம்பேட்டை (சென்னை), மலையூர் (புதுக்கோட்டை), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), சோளிங்கர் (ராணிப்பேட்டை), கிருஷ்ணபுரம் (பெரம்பலூர்), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), ஆயிக்குடி (தென்காசி), தாம்பரம் (செங்கல்பட்டு), போளூர் (திருவண்ணாமலை), கொடுமுடி (ஈரோடு), அம்முண்டி (வேலூர்), DSCL திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி), DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), பெருங்களூர் (புதுக்கோட்டை), ஆத்தூர் (சேலம்), தக்கலை (கன்னியாகுமரி), ஆலங்குடி (புதுக்கோட்டை), துவாக்குடி IMTI (திருச்சிராப்பள்ளி), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை), லால்குடி (திருச்சிராப்பள்ளி), எச்சன்விடுதி (தஞ்சாவூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), தென்காசி (தென்காசி), பொன்னை அணை (வேலூர்), ஆற்காடு (ராணிப்பேட்டை) தலா 1." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications