அடுத்த 2 மணி நேரம்.. குடை அவசியம்.. சென்னை டூ குமரி வரை.. 14 மாவட்டங்களுக்கு ”ஆரஞ்சு அலர்ட்”
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை முதல் குமரி வரை 14 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. காலையில் வெயில் அடித்தாலும் மதியத்திற்கு பிறகு மழை கொட்டி வருகிறது. தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேபோல் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்காலிலும் லேசான இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது " இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications