அடுத்த 2 மணி நேரம்.. 13 மாவட்டங்களில் கொளுத்த போகும் மழை.. ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியிருந்தது. இதற்கிடையே அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஒருசில இடங்களில் மாலை நேரங்களில் மழை பெய்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. எனினும், திருவள்ளூர், விழுப்புரம், விருதுநகர், கோவை, நீலகிரி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 11 செமீ மழை பதிவாகியது. அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நேற்று ஒரே நாளில் 8 செமீ மழை பதிவானது.

6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் காலையில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலே கொளுத்தி எடுத்தது. இதற்கிடையே தான் சென்னை வானிலை மையம், அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று மாலை 6 மணி வரை கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோன்று இன்று மாலை 6 மணி வரை நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் லேசான இடியுன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவமழை எப்போது?
* முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஒரு வாரத்திற்கான அப்டேட்டில் கூறியிருப்பதாவது:- தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்.
* இன்று 7 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13 ஆம் தேதி வரை
* நாளை 08-05-2025 மற்றும் 09-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 10-05-2025 முதல் 13-05-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மழைக்கு சான்ஸ்
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 2-6-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
* நாளை (08-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:
07-05-2025 முதல் 09-05-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 10-05-2025 மற்றும் 11-05-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில பகுதிகளில் சற்று உயரக்கூடும்.
07-05-2025 முதல் 09-05-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 10-05-2025 மற்றும் 11-05-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
07-05-2025 மற்றும் 08-05-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.
வெப்பநிலை நிலவரம்:
* அதிகபட்ச வெப்பநிலை:- வேலூர்: 41.0° செல்சியஸ்
* குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- திருத்தணி: 20.0° செல்சியஸ்
* கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
* தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்தது.
* தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-41° கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மலைப்பகுதிகளில் 22-28° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மழை அளவு (செமீ)
* தம்மம்பட்டி (சேலம்) 11,
* திருத்தணி (திருவள்ளூர்) 8,
* திருப்புவனம் (சிவகங்கை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), விருதுநகர் (விருதுநகர்), சாத்தூர் (விருதுநகர்) தலா 7,
* செஞ்சி (விழுப்புரம்), கல்லந்திரி (மதுரை), திருப்பத்தூர் (சிவகங்கை) தலா 6,
* RSCL-3 வளத்தி (விழுப்புரம்), கோவிலங்குளம் (விருதுநகர்), திருப்பூர் PWD (திருப்பூர்), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), மேலாலத்தூர் (வேலூர்), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), காட்பாடி (வேலூர்) 5, வந்தவாசி (திருவண்ணாமலை) தலா 5,
* குடியாத்தம் (வேலூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), துவாக்குடி IMTI (திருச்சிராப்பள்ளி), கேத்தி (நீலகிரி), சாத்தியார் (மதுரை), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), திருக்கன்னூர் (புதுச்சேரி), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), பெரியபட்டி (மதுரை) தலா 4,
* பொன்னை அணை (வேலூர்), காங்கேயம் (திருப்பூர்), விராலிமலை (புதுக்கோட்டை), கோடநாடு (நீலகிரி), கிருஷ்ணராயபுரம் (கரூர்), பேரையூர் (மதுரை), இலுப்பூர் (புதுக்கோட்டை), ஊத்துக்குளி (திருப்பூர்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), திருமானூர் (அரியலூர்), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), திருவள்ளூர் (திருவள்ளூர்), காரையூர் (புதுக்கோட்டை), பூண்டி (திருவள்ளூர்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), சிட்டம்பட்டி (மதுரை), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), அருப்புக்கோட்டை (விருதுநகர்), RSCL-2 கெடார் (விழுப்புரம்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை) தலா 3 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications