அதிகாலையே அதிரடி.. சென்னையில் வெளுத்து வாங்கிய மழை! ஊட்டிபோல் விடிந்த தலைநகரால் குஷியான மக்கள்
சென்னை: சென்னையில் அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை, இரவு, அதிகாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்வதும், மற்ற நேரங்களில் சுளீர் என வெயில் சுட்டெரிப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களிலும் நள்ளிரவிலும் ஆங்காங்கே மழை பதிவானது. இந்த நிலையில், இன்று அதிகாலை சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதேபோல் செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
கிண்டி, அடையாறு, கோயம்பேடு, அண்ணா நகர், வடபழனி, ஆவடி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், போரூர், பூந்தமல்லி, மாங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் நல்ல மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரம் இரவு பணி முடிந்து வீடு திரும்புபவர்கள், அதிகாலை பணிக்கு செல்பவர்கள் திடீர் மழையின் காரணமாக சிரமத்திற்கு ஆளாகினர்.
நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
22.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." என்று தெரிவிக்கப்பட்டது. எனவே அடுத்தடுத்த நாட்களிலும் சென்னையில் மழையை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications