ரேஷன் இல்லை என்றாலும்.. சென்னையில் பல வருடமாக இருப்பவர்களுக்கு நிவாரணம்? தமிழக அரசின் 3 பெரிய பிளான்
சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மழை வெள்ள நிவாரணத் தொகை மூன்று பிரிவுகளாக வழங்க அரசு திட்டமிட்டு உள்ளதாக அரசு தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

நிவாரண தொகை அறிவிப்பு இதனடிப்படையில், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்: சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்:
கூடுதல் நிவாரணம் வழங்கப்படும்: மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்; பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500/- ஆக உயர்த்தி வழங்கிடவும்:
என்னென்ன நிவாரணம்: மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7.410/-லிருந்து, ரூ.8,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்: எருது. பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000/- என்றிருந்ததை, ரூ.37,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்: வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக m.3,000/- என்றிருந்ததை, ரூ.4,000/- உயர்த்தி வழங்கிடவும்:
படகுகள் நிவாரணம்: சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட). ரூ.32,000/-லிருந்து, ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஒரு இலட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 இலட்சத்திலிருந்து, ரூபாய் 7.50 இலட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
டோக்கன்: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டோக்கன் எப்படி வழங்கப்படும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. ₹6,000 நிவாரணம் வழங்க டிச.16 முதல் டோக்கன் வழங்கப்படும். வீடு வீடாக மாநகரட்சி அதிகாரிகள் டோக்கன்களை வழங்குவார்கள். ரேஷன் கடை அடிப்படையில் டோக்கன் வழங்கப்படும்.
அதன்பின் 10 நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும். டோக்கனில் எந்த தேதியில் ரேஷன் கடைக்கு வர வேண்டும் , எந்த நேரத்திற்கு வர வேண்டும், எந்த ரேஷன் கடைக்கு வர வேண்டும் என்பது போன்ற விவரங்கள் இருக்கும்.
மூன்று கட்டம்: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மழை வெள்ள நிவாரணத் தொகை மூன்று பிரிவுகளாக வழங்க அரசு திட்டமிட்டு உள்ளதாக அரசு தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் கட்டமாக 1. ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு நிவாரண தொகை வழங்கப்படும்.
அதை தொடர்ந்து 2. ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்திருப்போருக்கு நிவாரண தொகை வழங்கப்படும்.
கடைசியாக 3. சென்னையில் பல ஆண்டுகளாக வசித்திருப்போர் உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதை சமர்ப்பிக்கும் பட்சத்தில் நிவாரணம் கிடைக்கும் என்று தகவல்கள் வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications