வேலூருக்கே விபூதி அடித்த சென்னை.. தமிழ்நாட்டில் இன்று வெயில் சதமடித்த ஊர்களின் லிஸ்ட்டில் ட்விஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஏராளமான ஊர்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் பதிவாகி உள்ளது. அதில் உச்சபட்ச வெயில் என்றால் அது சென்னையில் தான்.. சென்னை மீனம்பாக்கத்திலும், நுங்கம்பாக்கத்திலும் 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. ஆனால் 106 என்று சொல்ல முடியாது என்றும் 114 டிகிரி பாரன்ஹீட் போல் வெயில் இருந்ததாகவும் கூகுளே சொல்லியிருக்கிறது.
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்திருந்தது. அதேநேரம் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தது. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணித்திருந்த சென்னை வானிலை ஆய்வு மையம், நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும் என்று கூறியிருந்தது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. மேலும் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனிடையே சென்னையில் வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட்டையே தாண்டித்தான் வெப்பநிலை இன்று பதிவாகி இருந்தது. சென்னை மீனம்பாக்கத்தில் - 106°F வெப்ப நிலை பதிவாகி இருந்தது. இதேபோல் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் - 106°F வெப்பம் பதிவாகி இருந்தது. இந்த இரண்டு இடங்களில் வெப்பநிலையை கணிப்பதற்கான அமைப்பினை வானிலை மையம் நிறுவி உள்ளதால் இந்த இடங்களில் வெப்பநிலையே சென்னையின் வெப்பநிலையாக கருதப்படுகிறது.
சென்னையில் இந்த ஒரு வாரமாகவே கடுமையான வெப்பம் சுட்டெரித்து வருகிறது. மேகங்கள் சூழ்ந்தாலும், மேகமே இல்லாமல் சாதாரணமாக இருந்தாலும், இரவு அல்லது பகல் இரண்டிலுமே வீடுகளில் வெப்பம் சர்வ சாதாரணமாக 105 முதல் 110 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்தது. இதனால் மின்விசிறியில் இருந்து வெப்பக்காற்று தான் வீசியது. வெளியில் புழுக்கம் அதிகமாக இருந்தது.ஏசி இல்லாமல் இருக்கவே முடியாது என்கிற அளவிற்கு வெப்பம் இருக்கிறது.
சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 104°F வெப்ப நிலை பதிவாகி இருந்தது. இதேபோல் வெயிலுக்கு பெயர் போன வேலூரிலும் 104°F வெப்ப நிலை பதிவாகி இருந்தது. அடுத்ததாக திருப்பத்தூரில் - 102°F வெப்பம் பதிவாகி இருந்தது. மதுரை மாநகரில் 101°F வெப்பமும், பரங்கிப்பேட்டையில் 101°F வெப்பமும், மதுரை விமான நிலையத்தில் - 101°F வெப்பமும், புதுச்சேரியில் 101°F வெப்பமும், நாகப்பட்டினத்தில் 101°F வெப்பமும் பதிவாகி இருந்தது. தஞ்சாவூரில் 100°F வெப்பமும், கடலூரில் 100°F வெப்பமும் பதிவாகி இருந்தது.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications