Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேளச்சேரி கட்டிட தொழிலாளர்கள் நிலை என்ன? செய்தி சேகரிக்க அனுமதி மறுத்த போலீசார்.. பரபர வாக்குவாதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேளச்சேரியில் கனமழையால் ஏற்பட்ட பள்ளத்தில் 2 பேர் சிக்கியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் 4வது நாளாக தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், செய்தி சேகரிக்கச் சென்ற ஒன் இந்தியா செய்தியாளர்களை போலீசார் அனுமதிக்க மறுத்துள்ளனர். செய்தியாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே, வாக்குவாதம் நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மிக்ஜாம் புயலால் பெய்த அதி கனமழையால் சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களின் பெரும்பான்மையான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டுள்ள நிலையில், வேளச்சேரி, அதனை சுற்றியுள்ள பகுதிகள் இன்னும் மழைநீரால் சூழ்ந்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அவர்களை மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 Police did not allow press people in velachery workers rescue operation

வேளச்சேரியில் பள்ளம்: இதற்கிடையே, கடந்த ஞாயிறு முதல் கொட்டிய கடும் மழைக்கு மத்தியில் திங்கட்கிழமை பகலில் வேளச்சேரி பகுதியில் ஐந்து பர்லாங் சாலையில் பெட்ரோல் பங்க் அருகே, கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் காரணமாக விரிசல் விட்டு, 50 அடிக்கும் அதிகமான பள்ளமாக சரிந்தது. இதில், தொழிலாளர்கள் வசித்து வந்த கண்டெய்னர் ஒன்று சரிந்து, பள்ளத்தில் சிக்கியுள்ளது.

அந்த கண்டெய்னரில் இருந்த சுமார் எட்டுப் பேர் அந்த பள்ளத்தில் சிக்கியிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அதில் 5 பேர் மட்டுமே விழுந்ததாகவும், 5 பேர் மீட்கப்பட்ட நிலையில் இரண்டு பேர் தற்போது சிக்கியிருப்பதாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. மீட்புப்பணிகள் முடிந்தால்தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்ற நிலை உள்ளது.

மீட்புப் படையினர்: விபத்து ஏற்பட்ட இடத்துக்கு தீயணைப்புப் படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கந்த 3 நாட்களாக, அந்தப் பள்ளத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. ராட்சத மோட்டார்கள் மூலம், மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. எனினும், இன்னும் முழுமையாக மழைநீர் வெளியேற்றப்படவில்லை. உள்ளே சிக்கிக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படும் நபர்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

தமிழக அமைச்சர்கள் கேஎன்.நேரு, சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சம்பவ நடந்த இடத்தை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்திய நிலையிலும் பள்ளத்தில் விழுந்த அந்த இருவரும் இன்னும் மீட்கப்படாதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளத்தில் விழுந்து 3 நாட்களுக்கு மேல் ஆகியுள்ளதால் தொழிலாளர்களின் உறவினர்கள் அந்த பகுதியில் கதறலோடு காத்திருந்து வருகின்றனர்.

பெரிய சிக்கல்: 2 தொழிலாளர்கள் சிக்கிய அந்தப் பள்ளத்தில் தொடர்ந்து, நீர் ஊறி வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களாக ராட்சத பம்புகளை வைத்து நீரை வெளியேற்றியும், இன்னும் நீர் நிரம்பிக் கொண்டே இருப்பதால், உள்ளே சிக்கியவர்களை மீட்பதில் இழுபறி நீடித்துக்கொண்டே உள்ளது. 80 மணி நேரத்துக்கும் மேலாகியும் தொழிலாளர்கள் மீட்கப்படாத நிலையில் அவர்களின் உடல் நிலை குறித்த கவலை எழுந்துள்ளது.

பள்ளத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளர்கள் இத்தனை நாட்களாக உணவு, குடிநீர் இன்றி சமாளிக்க முடியுமா? அவர்கள் சுவாசிப்பதற்கு வழி உள்ளதா? அவர்கள் தற்போது என்ன நிலையில் உள்ளார்கள்? என்ற கேள்விகள் எழுகின்றன. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரவு, பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியாளர்களை அனுமதிக்க மறுத்த போலீசார்: இதற்கிடையே, உள்ளே நடக்கும் மீட்பு பணிகளை யாரும் பார்க்க முடியாத அளவுக்கு சுற்றிலும் பச்சை நிற திரை போடப்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகளை பார்க்க, ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்த நிலையில், போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். நமது ஒன் இந்தியா செய்தியாளர்களையும், போலீசார் உள்ளே மீட்புப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகில் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

மீட்புப் படையினர் மேற்கொண்டு வந்த பணிகள் குறித்து, நமது ஒன் இந்தியா செய்தியாளர்கள் காட்சிகளோடு, தகவல்களை லைவாக நமது தளத்தில் பதிவிட்டு வந்த நிலையில், போலீசார், இங்கு வீடியோ எடுக்கக்கூடாது என அனுமதி மறுத்து, கிளம்புமாறு கூறியுள்ளனர். பள்ளத்தில் நிறைய பேர் சிக்கி இருப்பதாக தகவல்கள் அப்பகுதி பரவி வருகின்றன, உண்மையைச் சொல்ல வேண்டிய கடமை ஊடகத்திற்கு இருக்கிறது என நமது செய்தியாளர் கூறியும், போலீசார் உங்களை அனுமதிக்க முடியாது என வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+