டமடமன்னு கொட்டப்போகுது கனமழை.. இன்று 2 மாவட்டங்களுக்கு அலர்ட்! சென்னை நிலை எப்படி இருக்கும்?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
05.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

06.12.2023 மற்றும் 07.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
09.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 10.12.2023 மற்றும் 11.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பூந்தமல்லி (திருவள்ளூர்) 34, ஆவடி (திருவள்ளூர்) 28, காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்) 27, சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), சென்னை (N) AWS (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு) தலா 24, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை) தலா 22, ராயபுரம் (சென்னை), மண்டலம் 13 அடையார் (சென்னை), திரு.வி.க நகர் (சென்னை), மண்டலம் 05 GCC (சென்னை), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), செம்பரம்பாக்கம்-வருவாய்த்துறை (காஞ்சிபுரம்) தலா 21, மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை), தரமணி ARG (சென்னை), மீனம்பாக்கம் AWS (சென்னை), சென்னை விமானநிலையம் (சென்னை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), கோடம்பாக்கம் (சென்னை), திருவூர் AWS (திருவள்ளூர்) தலா 19, தேனாம்பேட்டை (சென்னை), வளசரவாக்கம் (சென்னை), திருவள்ளூர் (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை) தலா 18, ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), NIOT_பள்ளிக்கரணை ARG (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), கொரட்டூர் (திருவள்ளூர்) தலா 17, கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 16, சோழவரம் (திருவள்ளூர்) 15, திருவாலங்காடு (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்), ஆலந்தூர் (செங்கல்பட்டு), திருப்போரூர் (செங்கல்பட்டு) தலா 14, செங்குன்றம் (திருவள்ளூர்) 13, மண்டலம் ஆலந்தூர் (சென்னை), திருத்தணி (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), செம்பரம்பாக்கம்-CMWSSB (காஞ்சிபுரம்) தலா 12, திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை) தலா 11, மின்னல் (ராணிப்பேட்டை), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை) தலா 10, செங்கல்பட்டு (செங்கல்பட்டு), மண்டலம் 12 D156 முகலிவாக்கம் (சென்னை), வாலாஜா (ராணிப்பேட்டை), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), திருத்தணி PTO (திருவள்ளூர்) தலா 9, மண்டலம் 03 புழல் (சென்னை), புத்தன் அணை (கன்னியாகுமரி), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை) தலா 8, ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), சோளிங்கர் (ராணிப்பேட்டை), குழித்துறை (கன்னியாகுமரி) தலா 7, காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), அரக்கோணம் (ராணிப்பேட்டை), பொன்னை அணை (வேலூர்), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) தலா 6, அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), சிற்றாறு-I (கன்னியாகுமரி), ஆற்காடு (ராணிப்பேட்டை), சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி) தலா 5, பாலமோர் (கன்னியாகுமரி), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), அம்முண்டி (வேலூர்), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), மண்டலம் 02 மணலி (சென்னை), மண்டலம் 13 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), கன்னிமார் (கன்னியாகுமரி), ராணிப்பேட்டை (ராணிப்பேட்டை) தலா 4, மரக்காணம் (விழுப்புரம்), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), செய்யார் (திருவண்ணாமலை), காட்பாடி (வேலூர்), கயத்தார் (தூத்துக்குடி), செய்யூர் (செங்கல்பட்டு), தக்கலை (கன்னியாகுமரி), வேலூர் (வேலூர்), பெரியபட்டி (மதுரை) தலா 3, சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), கல்லந்திரி (மதுரை), காக்காச்சி (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), வந்தவாசி (திருவண்ணாமலை), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) தலா 2, திற்பரப்பு (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), ஆரணி (திருவண்ணாமலை), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), குண்டாறு அணை (தென்காசி), அடையாமடை (கன்னியாகுமரி), சிட்டம்பட்டி (மதுரை), உசிலம்பட்டி (மதுரை), மாஞ்சோலை (திருநெல்வேலி), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), முக்கடல் அணை (கன்னியாகுமரி) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications